ஊர்க்குப்பை அள்ளவேண்டிய அரசியல்வாதி வீட்டுக்குப்பை அள்ளாததால் ஏறுகின்றார் குற்றவாளிக்கூண்டில்.
கிராம சபை தொட்டு மாநகர சபை வரைக்கும் மக்களால் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இவர்களுக்கு மக்கள் வழங்கும் ஆணை யாதெனில் „அள்ளு குப்பை'. ஆனால் அவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றவர்களில் எத்தனை பேர் கழிவு அகற்றுவதற்கும் பிரதேசத்தை துப்பரவாக வைத்திருப்பதற்கு உழைக்கின்றார்கள் என்பது கேள்விதான்.
இந்நிலையில் யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தனது சுற்றுக்சூழலை டெங்கு பரவக்கூடிய வகையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உட்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (20) சுகாதார துறையினர் பொலிஸ் உத்தியோகத்தர் சகிதம் யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கலிமா வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த யாழ் மாநாகர சபையின் த.தே.கூ உறுப்பினரான எம்.எம்.எம் நிபாஹிரின் வீடுவளவினை பரிசோதித்தபோது அவரது வீட்டில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தக்கூடிய எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலைமையே காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் உத்தியோகித்தர்கள் நடவடிக்கையில் இறங்கியபோது, அவர்களை அடித்து விரட்ட முற்பட்டுள்ளார், பிரதேசத்தையே துப்புரவாக வைத்திருப்பேன் என்று வாக்கு பெற்று மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகின்ற சபை உறுப்பினர்.
தொடர்ந்து உத்தியோகித்தர்களுடன் வந்திருந்த பொலிஸார் மாநகர சபை உறுப்பினரை எச்சரித்ததுடன் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறும் உத்தியோகித்தர்களை பணித்துள்ளனர்.
இதே வேளை குறித்த மாநகர சபை உறுப்பினர் கடந்த யாழ்ப்பாண மாநகர சபை தேர்தலில் 10 ஆம் வட்டார வேட்பாளராக போட்டியிடும் போது புத்தளத்தில் நிரந்திர வதிவிடத்தை கொண்டிருந்தார் என்கின்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற இவ்வுறுப்பினர் அதிகமான நாட்களில் வெள்ளை உடைகளையே விரும்பி அணிவதாகவும் ஆனால் தனது வீட்டு சூழலை சுத்தமாக வைத்திருக்க தெரியவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உறுப்பினருக்கு மக்கள் மாலை அணிவித்து அழைத்துவருவதை படத்தில் காண்கின்றீர்கள்.
0 comments :
Post a Comment