ரஷ்யாவுடன் ரகசிய தொடர்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முன்னாள் ஆலோசகர் கைது
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர் ரஷ்யாவுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்ததாக புகார் எழுந்ததை யடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ர்ம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்யா மறைமுகமாக உதவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
அந்த வகையில், ட்ரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற் கொண்டவர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த ஜார்ஜ் பபடோ போலஸிடமும் (வெளியுறவு கொள்கை ஆலோசகர்) விசாரணை நடத்தியது. ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தில் இடம்பெற்றிருந்த ஜார்ஜ், ரஷ்யாவுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள் ளது. இதையடுத்து, ஜார்ஜை கைது செய்து 14 நாட்களுக்கு சிறையில் அடைக்க அமெரிக்க மாவட்ட நீதிபதி ரந்தோல்ப் மாஸ் உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment