கோட்டா உள்ளிட்ட எழுவருக்கு வீசேட நீதிமன்றில் பிணை.
வீரகெட்டிய மெதமுலனவில் டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை அமைப்பதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான நடைபெற்று வரும் வழக்கு விசாரணை அண்மையில் அமைக்கப்பெற்ற விசேட நீதிமன்றுக்கு மாற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மன்றில் ஆஜராகிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிற்கு விஷேட மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் தலா 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையின் அடிப்படையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கும் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது கை ரேகைகளையும் பதிவு செய்துகொள்ளுமாறு நீதிமன்று பணித்துள்ளது.
டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக இவர்கள் விஷேட மேல் நீதிமன்றத்தில் இன்று (10) காலை ஆஜராகினர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment