தீய அரசியல் . சரத் டீ அல்விஸ்
இந்தக் கட்டுரை தற்போதைய அரசியல் சொற்பொழிவுகள் பற்றிய ஒரு ஆய்வு ஆகும், அதில் ஒவ்வொருவரும் செய்வது என்னவென்றால் அவர்கள் நினைப்பதை எல்லாம் எப்படியாவது நியாயப்படுத்துவதே ஆகும். அதில் இப்போது அதிகாரத்தில் உள்ளவர்கள், தாங்கள் இழந்த அதிகாரத்தை திரும்பவும் கைப்பற்ற முடியும் என நம்புபவாகள் மற்றும் தாங்கள் மட்டுமே அதிகாரத்துக்கு உரித்துடையவர்கள் என நம்புவர்கள் ஆகிய அனைவரும் உடபடுகிறார்கள். தீமை என்பது சில விளக்கமான காரணங்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு குற்றச்சாட்டுக்குரிய ஒரு பெயரடை ஆகும். பெரும்பாலானவர்கள் செய்யும் விஷயங்கள் எப்படியோ பின்னர் தீமையாக மாறிவிடுகிறது அத்துடன் தீமையாகவும்; நினைவுகூரப்படுகிறது. “லசந்த என்பவர் யார்? என்று கோட்டபாயா ராஜபக்ஸ பி.பி.சி யின் ஸ்ரீபன் சக்குரிடம் கேட்டது பிரபலமான ஒன்று. அது அதிகாரத்தின் அகந்தை அல்ல அது அதிகாரத்தின் தீமை ஆகும். மனித வாழ்க்கையை முக்கியமற்றதாக ஆக்குவது தவறு. கொலையை முக்கியமற்றதாக ஆக்குவது தீமையானது. இது கடந்தவாரம் அரசியல் நினைவு என்கிற தலைப்பில் நான் எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாகும். அது ஒரு குற்றச்சாட்டை உள்ளடக்கிய கட்டுரை, அதில் நான் எங்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஊடகவியலாளர் கீத் நொயார் காணாமற்போன அந்த இரவில் சபாநாயகர் கரு ஜயசூரியாவிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பினைப் பெற்றது பற்றி தனக்கு ஞ}பகம் இல்லை என்று சொன்னதில் இருந்து எது சரி அல்லது எது பிழை என்று கண்டறியும் அவரது தார்மீக நியாயப்படுத்தலைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சித்திருந்தேன்.
லசந்த விக்கிரமதுங்க, உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற படுகொலைகள் முடிவடைவதற்கு சற்று முன்னர் 2009ல் தீமையைச் சந்தித்தார். ரிச்சட் டீ சொய்சா 1983 ஜூலை கலவரத்தின் பின் ஒன்பது வருடங்கள் கழித்து 1990ல் தீமையை நேசிக்க நேர்ந்தது, அந்தக் கலவரம் ஏறக்குறைய மேலும் இரண்டு தசாப்தங்களுக்கு நீடிக்கும் வகையில் நரகத்தையும் மற்றும் நரகத் தீயின் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்டிருந்தது. மிகச் சமீபத்தில் தீமையின் பாதிப்புக்கு உள்ளானவர் ஊடகவியலாளர் போட்டல ஜயந்த, தீமையுடன் தனக்கு நேர்ந்த கொடுமையை விபரிப்பதற்கு வேண்டி அவர் உயிருடன் வாழ்ந்தார்.
“அவர்கள் எனது தலைமுடியை வெட்டி எனது வாய்க்குள் திணித்து எனது வாயை அடைத்தார்கள். அவர்கள் எனது இரண்டு கால்களையும் பலமாகத் தாக்கினார்கள் அத்துடன் ஒரு காலின் கணுக்கால் பகுதியில் அதை முறித்தார்கள். அவர்கள் ஒரு மரத்துண்டைப் பயன்படுத்தி எனது வலது கை விரல்களை இரத்தம் வரும்வரை சிதைத்து சேதமாக்கினார்கள். ‘இது எழுதுவதில் இருந்து உன்னை நிறுத்திவிடும்’ என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் இறுதியாக என்னை போகவிட்டார்கள், அப்போது அவர்கள் ‘நாங்கள் உன்னை இப்போது கொல்லமாட்டோம், ஆனால் நீ அரசாங்கத்துக்கு எதிராக இதற்கு மேலும் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்தால், ஊடகங்களிடம் இதுபற்றி பேசினால், நாங்கள் உன்னைக் கொல்வோம்” என்று சொன்னார்கள்.
எவரையும் விரல் நீட்டிச் சுட்டிக்காட்டுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல, இருப்பினும் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் காரணமாக அப்படியாகத் தோன்றலாம். இங்கு முயற்சிக்கப் பட்டிருப்பது என்னவென்றால், ஒரு தசாப்தத்திற்கு மேலான சுதந்திரமற்ற நிலை மற்றும் மூன்று வருடங்களாக அனுபவிக்கும் அதிகமான குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள குழப்பமான ஆரம்பநிலையில் உள்ள சுதந்திரம் என்பதற்குப் பின்னர் எங்கும் செல்வதற்கு இடையில்; எங்கள் கூட்டு தார்மீக திசைதிருப்பலுக்கான ஒரு தேடலை. இது முடிவில்லாத ஒரு விசித்திரக்கதை.
அரசன் தீமையை அதன் சிக்கல் நிறைந்த கொடூரமான பயங்கரவாதத்துடன் பார்த்தான். தனது சகோதரர்களடன் ஒன்றிணைந்து தீமையை அழித்து நாட்டை உடனடி ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அவன் ஒரு பெரிய இராணுவத்தை உருவாக்கினான். போர் மிகவும் கொடூரமானதாக இருந்தது, ஆனால் அதன் நோக்கம் தூய்மையானதாக இருந்தது. பலர் இறந்தார்கள் ஆனால் அரசன் தனது இலட்சியத்தில் உண்மையாக இருந்ததுடன் தான் எடுத்த நிலையில் இருந்து பின்மாறுவதற்கு மறுத்துவிட்டான். அது உலகம் முன்பு ஒருபோதும் பார்த்திராத தீமைக்கு எதிரான ஒரு மனிதாபிமானப் போர். யுத்தத்தில் அரசன் நிறுத்தியிருந்த இராணுவத்தை மக்கள் பாhத்தார்கள். அவர்களது சிறந்த துணிச்சலை மக்கள் பாராட்டினார்கள். அவர்கள் தங்கள் ஆழமான மனிதத்தன்மையை புகழும் பாடல்களைப் பாடினார்கள். அந்த அரசன் உண்மையிலேயே சிறந்த அரசனாக இருந்தான். எதிரி மடிந்துவிட்டான. ஆனால் தீமையோ இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தது, தீமை யுத்தத்தில் மரணிக்காது. தீமை இறந்தவர்களோடு இறந்து உயிர் பிழைத்தவர்களோடு வாழ்ந்துகொண்டிருக்கும், அது தான் கீழ்படுத்திய ,மனித இதயங்களில் மட்டும் உயிர்வாழக்கூடியது மற்றும் தீமையானது மனித மார்பின் தாளத்திற்கு ஏற்ப ஒத்துப்போகும் மேதாவித்தனம் கொண்டது.இது மனித மனச்சாட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தினை சாதுரியமாக அபகரிக்க கூடியதுமாகும்.
தீமையான பூதம் நல்ல தேவதைகளைத தோற்கடிக்கும் விசித்திரக்கதை நமது போருக்குப் பிந்தைய அரசியலுக்கு மிகவும் பொருத்தமான ஒன்று. 2009க்குப் பிந்திய எமது பிழையான ஜனநாயகப் போக்கு நல்ல நோக்கங்களிலும் தீய முடிவுகள் வெளிவரலாம் என்பதற்கு தெளிவான உதாரணமாகும். போரின் முடிவு விரும்பத்தகாத தேசியவாத நீரோட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. இங்கு முயற்சித்திருப்பது என்னவென்றால், ஆயுத மோதலின் முடிவிலிருந்து எங்களைப் பிடித்துள்ள யுத்தத்துக்கு பிந்தைய சமாதான நேரத்து தீமையை புரிந்து கொள்வது பற்றியது. இராணுவ மோதலின் முடிவிலிருந்து எழுந்துள்ள மூல இராணுவப் பிளவுகள், இந்த ஆய்வுக்கு ஒரு தேசிய கட்டாயத்தை ஏற்படுத்துவதற்கு போதுமானளவு தீமைகளைக் கொண்டுள்ளன.
தவறில்லாமல் நாங்கள் தீமைக்கும் மற்றும் கொடுங்கோன்மைக்கும் ஒரு மாளிகையை கட்டி எழுப்பியுள்ளோம். பிரதம நீதியரசர்மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து அவரது பதவியைப் பறித்தது, அரசியல் நோக்கம் கொண்ட பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தது, ஆனால் அதில் தீமை இல்லை. பிரதம நீதியரசர் குற்றம் செய்துள்ளார் எனக் கண்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவரான அனுர பிரியதர்சன யாப்பா, வெளியேற்றப்பட்ட பிரதம நீதியரசரின் வீட்டு நுழைவாயிலின் முன்பு நடத்தப்பட்ட பாற்சோறு, பலகார விருந்துகளில் பங்கேற்கச் சென்றார், அது மாசு மறுவற்ற ஒரு சுத்தமான தீமை ஆகும். அதையும் விடப் பெரிய மோசமான தீமை என்னவென்றால் அதன் பிறகு வந்த யகபாலன அரசாங்கத்தில் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சுப் பதவியைப் பெற அவர் முடிவெடுத்ததுதான்.
பாதுகாப்புச் செயலாளர் - பெயரளவில் அவரும் ஒரு அரசாங்க ஊழியர் - பிரதம நீதியரசரை வெளியேற்றியதை கொண்டாடும் விதமாக ஒரு வாணவேடிக்கை காட்சியை தியவண்ண ஏரியில் நடத்தும்படி கடற்படையினருக்கு கட்டளையிட்டபோது அது அளவிட முடியாத கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு தீமை. இந்த இரண்டு சம்பவங்களும் தீமை என்பது வில்லத்தனம் மற்றும் கெட்ட நோக்கம் ஆகிய இரண்டும் சேர்ந்த ஒரு கலவை என்பதற்கான சிறிய உதாரணங்களாகும்.
மக்களாகிய நாங்கள்தான் முனகூட்டியே கீழ்படிந்து ஒரு தீய அசுரனை உருவாக்கியுள்ளோம். கொடுங்கோன்மைக்கான பெரும்பாலான அதிகாரங்களும் எங்களால் இலவசமாக வழங்கப்பட்டவையாகும். அந்த குழப்பமான காலங்களில் பாரிய தீமையைத் தடுப்பதற்கு அதற்கு எதிராகப் போராடுவதற்கு மக்கள் மனமுவந்து அனுமதியளித்தார்கள். ஆனால் நாங்கள் வெறுப்பவர்களுக்கு அதனால் என்ன செய்யமுடியுமோ, அதை சமாதானம் நிலைநாட்டப்பட்டதும் எங்களுக்கும் அதனால் செய்யமுடியும் என்பதை நாங்கள் உணரத் தவறிவிட்டோம் எங்கள் நிறுவனங்கள் அழிக்கப்படுவதை நாங்கள் அனுமதித்தோம்.17வது திருத்தம் ஒட்டுப்போட்டு திருத்தப்படும் என்று நாங்கள் கற்பனைகூடச் செய்ததில்லை. 18வது திருத்தம் விவாதத்துக்கு வந்தபோது எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர். ஆவர்கள் பாராளுமன்ற சபை முன்றலில் எதிர்ப்புத் தெரிவித்து அணிவகுத்துச் செல்லாதது தீமையானது அல்ல, ஆனால் தீமையை உறுதிப்படுத்துவதற்கு தெளிவான ஒப்புதலை வழங்குவதற்கு தகுதியானது.
பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் ஜனநாயகம் ஓரளவு வன்முறைகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியம், சில இரகசிய நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதுடன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சிலவற்றையும் இரத்துச் செய்யவும் விரும்பும். அதேவேளை இது அந்த நேரத்தில் யுத்தத்தில் போராடுவதற்கு ஏற்ற தெளிவான மூலோபாயமாக இருந்த போதிலும், யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஆளும் குடும்பத்தினர் முழு அதிகார சக்தியும் வழங்கிய கவர்ச்சிகரமான அதிகார மயக்கத்தில் மோசமாக நடக்கலாயினர்.
யுத்தத்தின்முடிவு ஒரு சமாதானத்தைக் கொண்டுவந்தது அது அதிகாரத்தை அல்லது கண்காணிக்கும் அரசாங்கத்தின் அதிகாரத்தைக் குறைக்கவில்லை. அது பாதுகாப்பு ஆட்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பேச்சு சுதந்திரம் ஒரு ஆடம்பரமான பொருளாக இருந்தது,அது அரசாங்க புலனாய்வுத் துறைகளிலுள்ள குண்டர்களுடன் ஓடி ஒளிந்து விளையாடத் தகுதியானவர்களுக்கே கிடைக்கக்கூடியதாக இருந்தது. அபிப்ராய பேதம் இராஜத்துரோகம். எதிர்ப்பாளர்கள் தேசத்துரோகிகள். குறுகிய மனப்பாங்கு தேசபக்தியின் அடையாளம். ஒரு ஆளும் குடும்பத்தின் உலகப்பார்வையே தேசபக்தியின் குறுகிய கண்ணோட்டமானது. சுதந்திர ஸ்ரீலங்கா பல தலைவர்களைக் கண்டது. அவர்களில் யாரும் மகிந்தவுக்கு ஈடாக மாட்டார்கள், தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை அரசின் முக்கியமான பதவிகளில் அமர்த்தி அவர்களை பிரத்தியேக நடுவர்களாகவும் மற்றும் அதிகாரத்தின் ஏகபோக உரிமையாளர்களாகும் மாற்றியது,
நாங்கள் அடிக்கடி கேட்டுவருவது, “அரசியல் தீமையானது” அதிலிருந்து விலகி இரு அல்லது அரசியல் தீமைகள் பற்றிய புலம்பல்களை. அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் பெரும்பாலும் மிகவும் முக்கியமான தீயையைப் பற்றிய உண்மையை தவறவிட்டு விடுகிறோம். அது அரசியல் அதிகாரத்தை கையாள்பவர்களின் பகுத்தறிவுத் தெரிவுகளை திரித்து விடுகிறது. அரசியல் தீமையானது அல்ல அரசியல்வாதிகள் மட்டுமே அதை தீமையானதாக மாற்றிவிடுகிறார்கள். ஏனென்றால் அரசியல் என்பது வெகுஜனங்கள் மற்றும் கும்பல்களுடையது, ஏனென்றால் கூட்டான தீமை என்பது அரசியல்வாதிகளால் கையாளப்படும் வெகுஜனங்கள் மற்றும் கும்பல்கள் ஊடாகவே பிரதிபலிக்கிறது.
போர் முடிந்துவிட்டது. ஆனால் போர் கற்றுத்தந்த பாடங்கள் நினைவிலுள்ளன. கட்டுப்பாட்டை கையாள்வதற்கு அச்சத்தை பயன்படுத்த அரசாங்கத்தை போர் கட்டாயப்படுத்தியது. போர் அச்சத்தை ஒரு அதிகாரக் கருவியாக ஆக்கியது. நாங்கள் பயப்பட்டால் நாங்கள் கிழ்படிவோம். நாங்கள் பயப்பட்டால் ஒன்றில் கீழ்படிவோம் அல்லது பாதுகாப்பாக இருப்பதற்கு வேண்டி செயலற்ற நிலையில் இருப்போம். இப்படித்தான் ஜனவரி 8, 2015க்கு முன்பு நாங்கள் வாழ்ந்தோம்.
மகிந்த ராஜபக்ஸ ஒரு எளிமையான ஆட்சிப்பாணியைக் கொண்டிருந்தார். மக்கள் எங்கள் கலாச்;சாரத்துக்கும் மற்றும் எங்கள் பெரிய சுய - நலன்களைப் உறுதிப்படுத்துவதில் - பொதுவாக - எங்கள் நாட்டுக்கும் குறிப்பாக பௌத்த சமயத்துக்கும் கிடைக்கும் வெகுமதிகளுக்கும் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும் என அவர் எதிர்பார்த்தார். ராஜபக்ஸ குலத்தின் சுயநலன்களை உறுதி செய்யவேண்டியதின் முக்கியத்துவம் பற்றி அவர் தனது குடும்பத்தினருக்கு கற்பித்தார். அவர் தனது அரசியல் கைக்கூலிகளுக்கு அவர்களது இயல்பான சுய நலத் தன்மையையும் மற்றும் அவரது அரசியல் இயந்திரமான கட்சியையும் நிலைநிறுத்த வேண்டியதின் முக்கியத்துவத்தையும் போதித்தார்.
பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவது என்பது தீமைக்கு எதிராகப் போராடுவது ஆகும். அந்தக் கருத்தில் எந்த தவறும் இல்லை. ஒருவர் இன்னும் சற்று மேலேபோய் தீமையை எதிர்த்து அதிக சக்தியுடன் போராடவேண்டிய அவசியத்தைப் பற்றி சொல்லக்கூடும். ஆனால் அநேகமாக அந்த வழிப்படி எப்போதும் அதிர்ஷ்டம் அமைவதில்லை. மனிதர்களுக்கு இழைக்கப்படும் சில மோசமான செயல்கள் உலகின் சிறந்த விருப்பத்தின்படியே செய்யப்படுகின்றன. ஒரு ஜனநாயகத்தில் தீமையைக் கண்டு குருட்டுத்தனமாக இருப்பதுகூட தீமைக்குச் சமமானது. தீமைக்கு எதிரான பாதுகாப்பற்றி நிறுவனங்களே எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமையாகும்.
குடும்ப ஆட்சி திரும்பவும் வரக்கூடும். எங்கள் ஞாபகங்கள் குறுகிய ஆயுள் கொண்டவை. கடந்த மூன்று வருடங்களாகவுள்ள காட்டிக்கொடுப்புகள் மற்றும் ஏமாற்றங்கள் என்பன அந்த நினைவுகளை இன்னும் சிறிதாக மாற்றிவிடுவது மட்டுமன்றி அவற்றை முற்றாக அழித்து விடுவதிலும் கணிசமான பங்களிப்பையும் ஆற்றக்கூடும். குடும்ப ஆட்சி மிகவும் இரக்கமற்றமுறையில் இருந்த ஒன்று, அது எங்கள் சுதந்திரத்தை அழித்தது அல்லது முரட்டுத்தனமாக சுருக்கியது, அதை பக்கவாட்டில் இருந்து கவனித்தவர்களுக்கு இப்போது அதை முற்றாக நினைவு கூருவது கிட்டத்தட்ட அசாத்தியம். அதன் ஆழமான தழும்புகளை சுமந்தவர்கள் மட்டும்தான் இன்று அதை நினைவில் வைத்திருப்பார்கள்.
அது ஒரு தீமையான அரசாங்கம் வடிவமைக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட சம்மதம் என்பனவற்றைக் கொண்டிருந்தது. 2015ல் அது அகற்றப்பட்டது, அதை வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டது என்று சொல்வதைவிட ஒரு விபத்து என்று சொல்லலாம். நாங்கள் ஆபத்தில் உண்மைகளை மறந்துவிடுவோம் பிரபலமான புராணக்கதைக்கு மாறாக, நிக்கலோ மச்சியவெல்லி என்கிற இத்தாலியர் ஒரு வில்லனாக இல்லாவிட்டாலும் அவர் மனித இயல்புகளின் நடைமுறைத் தத்துவவாதி. இன்று நாம் எதிர்கொள்ளுவனவிற்கு அவருடைய ஆலோசனைகள் பொருத்தமான சிறந்த நோக்கத்தை கொண்டுள்ளன.
“இப்போது ஒரு நன்கு ஒழங்கமைக்கப்பட்;ட குடியரசிற்கு மேலதிகமான அரசியலமைப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அவசியமில்லை, நேரம் பயனுள்ளதாக இருந்தாலும்கூட முன்னுதாரணம் மோசமானதாக உள்ளது. நல்ல நோக்கங்களுக்காக சட்டங்களைப் புறக்கணிக்கும் செயல்பாடு நிறுவப்பட்டால், சிறிது காலத்தின் பின் தீய நோக்கங்கள் போலிக் காரணங்களின் கீழ் சட்டங்களை புறக்கணிக்க நேரிடும். எல்லாவற்றுக்கும் வழங்குவதற்கு சட்டம் இல்லையென்னால் ஒவ்வொரு அவசர தேவையின்போதும் அதைச் சரி செய்வதற்கு நிலையான விதிகளை பிரயோகிக்க வேண்டி நேரிடும் இதன்படி எந்த ஒரு குடியரசும் ஒருபோதும் நிறைவான ஒன்றாக இருக்காது”.
0 comments :
Post a Comment