மட்டு மாவட்டத்தை முற்றாக முடக்கியது ஹர்த்தால்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புல்லுமலைப்பிரதேசத்தில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலை ஒன்று நிறுவப்படவுள்ளது. தொழிற்சாலையினால் மாவட்டம் பெரும் வறட்சியை சந்திக்கும் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் நிமிர்த்தம் விவசாயிகள் பின்னடைவுகளை சந்திப்பர் என்றும் கால்நடைகள் மற்றும் மரம்செடிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் என்பதும் அவர்கள் கணிப்பு.
இந்நிலையில் மாவட்டத்திலுள்ள இளைஞர் அணிகள், சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு ஹர்த்தால் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இவ்வழைப்பின் பிரகாரம் இன்று இடம்பெற்ற ஹர்த்தாலால் முழு மட்டு மாவட்டமும் முடங்கியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொட்டு சிறு கடைகள் வரை சகல வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. பாடசாலைகள் அனைத்துக்குமான மாணவர்கள் பாடசாலையை பகிர்கரிஸ்துள்ளனர். அரச நிறுவனங்களுக்கு ஊழியர்கள் சமூகமளித்திருந்தாலும் பொதுமக்கள் செல்லாமையால் அவையும் முடங்கிக் காணப்படுகின்றது.
குறித்த தொழிற்சாலையானது அரசியல் பின்புலமுள்ளோரினால் நிறுவப்பட்டுள்ளதால் தமது போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா என்ற சந்தேகத்துடனேயே காணப்படுகின்றனர்.
இதேநேரம் குறித்த தொழிற்சாலையை தாங்கள் நிறுவியே தீருவோம் என அதனுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்டுகின்ற அரசியல்வாதிகள் கர்ஜித்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment