ஐயோ! முழுக்கூட்டமைப்பும் சேர்ந்து எனக்கு அடிக்கிறாங்கள். அழுகின்றார் விக்கி!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசராவார். இவர் வட மாகாண முதலமைச்சராக சபையின் அமைச்சர்களில் ஒருவரான டெனீஸ்வரன் உட்பட சிலரை பதவி நீக்கம் செய்திருந்தார்.
தம்மை பதவி நீக்கியது சட்டத்திற்கு முரணானது என முன்னாள் நீதியரசருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தார் டெனீஸ்வரன். பதவிநீக்கம் செய்தது சட்டத்திற்கு முரணனது என்றும் அவர் தொடர்ந்தும் அமைச்சராக நீடிக்கலாம் என்றும் நீதிமன்று தெரிவித்திருந்தது.
குறித்த நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற முன்னாள் நீதியமைச்சர் மறுத்து வந்த நிலையில், முன்னாள் நீதியமைச்சர் நீதிமன்றை அவமதிக்கின்றார் என வழக்கு பதிவு செய்திருந்தார் டெனீஸ்வரன். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முதலமைச்சர் தரப்பு சட்டவாளர் கனகஈஸ்வரன், மேலதிக எதிர்ப்புகளை சமர்ப்பிக்க தமக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கோரியதை அடுத்து, வரும் செப்ரெம்பர் 18ஆம் நாள் வரை வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
வரும் 18ஆம் நாள் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் ஏனைய எதிர்மனுதாரர்களான அமைச்சர்கள் அனந்தி சசிதரன், சிவநேசன் ஆகியோரையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, வடக்கு மாகாண அமைச்சர் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்கியமை செல்லாது என்று ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஒக்ரோபர் 9ஆம் நாள் வரை நீடிக்கவும், மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த தவணையின் போது இரண்டு நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது
எனினும் இந்த உத்தரவை முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடைமுறைப்படுத்தாத நிலையில், அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றை டெனீஸ்வரன் தரப்பு சட்டவாளர் தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்ற விடயங்களை முடித்துக்கொண்டு வெளியேறிய முன்னாள் நீதியரசர், தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலரும் இருப்பதாக வருத்தம் தெரிவித்தார்.
இதேவேளை, தன்னூடாக முதலமைச்சர் விக்னேஸ்வரனை எம்.ஏ. சுமந்திரன் பழி வாங்குவதாக கூறப்படும் கருத்துக்கள் அடிப்படையற்றவை எனவும் வடமாகாண சபை உறுப்பினர் பா. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளதுடன் 'விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி புதிய அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு தற்போது அமைச்சர்களாக இருக்கும் நால்வரும் துணை போவதாகவம் அவர்; கூறியுள்ளார்
0 comments :
Post a Comment