Wednesday, September 5, 2018

இஸ்லாத்திற்கு மதம் மாறக்கோரி தமிழ் குடும்பத்தின் வீடு தீக்கிரை! மூன்று மாதக்குளந்தை மயிரிழையில் உயிர் தப்பியது.

அம்பாறை மாவட்டத்தின் வளத்தாப்பிட்டி கிராமத்தில் உள்ள ஸ்மையில்புரம் சுனாமி வீட்டு திட்டத்தில் வசித்து வரும் சோதிநாதன் சந்திரசேகர் என்ற தமிழ் குடும்பம் ஒன்றை இஸ்லாம் மதத்திற்கு வருமாறு அச்சுறுத்தி அவர்களது வீடு மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (31) அதிகாலை அம்பாறை வளத்தாப்பிட்டி ஸ்மையில்புரத்தில் உள்ள சோதிநாதன் சந்திரசேகர் வீட்டிற்கு வந்த இனந்தெரியாத குழு ஒன்று தங்களது வீட்டுக்கு தீவைத்து கொழுத்தியதாகவும் இதன்போது வீட்டில் இருந்த முச்சக்கர வண்டி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போது தக்கசமயத்தில் தாங்கள் விழித்துக் கொள்ளாது இருந்திருந்தால் தங்களது மூன்று மாத குழந்தை உட்பட அனைவரும் தீயில் எரிந்து இறந்திருப்போம் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.

சம்பவத்திற்கான பின்னணி!

மட்டக்களப்பு கரடியணாறு பகுதியைச் சேர்ந்த சோதிநாதன் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவியான வினோஜினி மற்றும் அவரது மூன்றுமாதக் குழந்தை என குடும்பமாக தனிமையில் வசித்து வந்த குடும்பம். தங்களது தொழில் நிமிர்த்தம் கடந்த ஐந்து வருடங்களாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள ஸ்மையில்புரத்தில் வசித்து வந்துள்ளனர்.

குறித்த கிராமம் சுனாமிக்கு பின்னர் உருவாகிய கிராமம் என்பதுடன் அது தற்போது ஸ்மையில் புரம் என்ற பெயருடன் முழு முஸ்லீம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு ஒரு சில தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்த கிராமத்தில் வசிப்பதாக இருந்தால் நீங்களும் முஸ்லீமாக இருக்க வேண்டும் என்று அங்குள்ள இஸ்லாமிய மதவாதிகள் இவர்களை அச்சுறுத்தி வந்த நிலையில் பல தடவைகள் சில நபர்களுடன் கைகலப்பு நடைபெற்று பொலீசில் முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியின் ஊடாக அதிக வருமானத்தை பெற்றுவந்த குறித்த குடும்பம் ஸ்மையில்புரத்தில் உள்ள இஸ்லாமியர்களினால் பல தடவைகள் இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையிலேயே அந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய 9 பேர்!

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருடைய மனைவியின் குடும்பத்தில் இருந்த 09 பேர் இது வரை இஸ்லாம் மதத்திற்கு சென்றுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மட்டக்களப்பு நெல்லிக்காடு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இவர்களும் தொழில் நிமிர்த்தமாக அம்பாறை வளத்தாப்பட்டி கிராமத்திற்கு சென்று வந்த போது சம்மாந்துறையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரின் ஊடாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பல குடும்பங்களை பணம் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கி இஸ்லாம் மதத்திற்கு இணைத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கண்டுகொள்ளாத பொலிசார்!

வீடு மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சம்மாந்துரை பொலீசில் முறைப்பாடு செய்தும். குறித்த சம்பவம் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளாத பொலிசார், ஒரு குடும்பத்தின் கொலை முயற்சியை சிவில் முறைப்பாடாக பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை!

வளத்தாப்பட்டி ஸ்மையில்புரத்தில் உள்ள சில இஸ்லாமிய மதவாத குழுக்கள் தங்களது குடும்பத்தை கொலை செய்ய முயற்சி செய்வதாகவும், தங்களது மதத்தை விட்டு இஸ்லாம் மதத்திற்கு நாங்கள் மாற முடியாது எனவும் தாங்கள் தங்களது வீட்டில் வைத்து வணங்கிய இந்து கடவுள்களை எடுத்துக் கொண்டு கரடியணாறு பகுதிக்கு வந்துள்ளதாகவும் இனிமேல் அங்கு சென்றால் தங்களுக்கு எதுவும் நடக்கலாம் என்பதால் இந்த அரசாங்கம் தங்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

இலங்கையிலே திட்டமிட்ட மதமாற்றங்கள் சமூகங்களிடையே விரிசலை ஏற்படுத்தி வருவதுடன் இது நாளடைவில் பாரிய வன்முறைகளுக்கு வழிகோலும் என்பது கவலைக்குரியவிடமாகும்.








2 comments :

Unknown September 6, 2018 at 1:40 AM  

அப்புரம்... ஜிஹாது... இஸ்லாமிய தீவிரவாதிகள்.. ஐஸ்ஐஸ் க்கெல்லாம் இதுல தொடர்பு இருக்குன்னெல்லாம் சொல்லுங்கலேன். அப்பதானெ உங்க மீடியா ரீச்சாகும்.

அடேய் கூழ்முட்டைங்கலா.... ஒன்னு சொல்லுரேன் கேலுங்க.. இஸ்லாமிய மார்க்கத்திட்கு இப்படியெல்லாம் மக்களை எடுப்பதட்கு இஸ்லாம் ஒன்னும் உலகில் அழிந்து வரும் மார்க்கமில்லை... மாறாக உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு மதம். இது ஒன்னும் வெறும் சடங்கு சம்பிரதாயமில்லை, இது வாழ்க்கை நெறி, அதனாலேயே இம்மார்க்கத்தை அழித்தொழிக்க நினைக்கும் மேலைநாடுகளில் மிக வேகமாக மக்களை சென்றடந்து கொண்டிருக்கின்றது.

இது இலங்கை முஸ்லிம்களைப்பற்றி வெளியுலகிட்கு தவறான கருத்துக்களை காட்டி அதன் மூலம் ஒரு இனக்கலவரங்களை உருவாக்குவட்கான ஒரு சதித்திட்டமாகும்.

Anonymous ,  September 6, 2018 at 10:53 AM  

This is no the way Islam showed

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com