Monday, September 24, 2018

அதாஉல்லா வின் அராஜகம். உடையுமா கட்சி?

தேசிய காங்கிரஸ் தலைமை மற்றும் அதன் பிரதி தலைவர் உதுமாலெப்பை ஆகிய இருவருக்கிடையிலான முரண்பாடு தொடர்பாக கட்சியின் முக்கியஸ்தர்களை தொடர்பு கொண்டும் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் ஒன்றின் தோல்வியின் பின்னால் அமைச்சர் அதாஉல்லா கட்சி முக்கியஸ்தர்களுக்கான இடை வெளி வெகுவாக அதிகரித்து வந்தது என்பதும் அதாஉல்லா தனது கட்சியை இனி முன் கொண்டு செல்ல முடியாது எனும் சூழலில் அக்கரைப்பற்று பிரதி மேயராக இருக்கும் அஸ்மி அப்துல் கபூர் தான் தலைமையாக இருக்கின்ற அதாஉல்லா வோடு மிக கடுமையாக உழைத்தார் என்பதும் கட்சி தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார் என்பதும் அனைத்து போராளிகளாலும் ஏற்க கூடியதாக இருந்தது.

பிளவின் தொடக்க புள்ளி. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் போட்டியிட வேண்டுமென உதுமா லெப்பை உள்ளிட்ட அணியினர் விரும்பியதாகவும் இணைந்து போட்டியிடக் கூடாது தனித்து போட்டியிட வேண்டுமென தலைவர் அதாஉல்லா விரும்பியதாலும் அதை நியாய படுத்துகின்ற தேவை அஸ்மி அப்துல் கபூருக்கு இருந்தமையும் ஆரம்பமாக உருவாகிய விடயமாகும்.

அதனை தொடர்ந்து அக்கரைப்பற்று மாநகர வேட்பாளர் தெரிவின் போது சட்டத்தரணி பஹீஜ் உள்ளிட்ட சிலர் மேயர் வேட்பாளராக தங்களை முன்னிறுத்திவரும் சூழ்நிலையில் மேயராக அதாஉல்லாவின் மகன் சக்கி அதாஉல்லாஹ் முன்னாள் மேயர் வர வேண்டுமென பகிரங்கமாக குறிப்பிட்ட சிலரின் கனவுகளில் மண்ணை தூவ அஸ்மி அப்துல் கபூர் தான் காரணமாக இருந்தார் என்பதும் இரண்டாவது விடயம்.

அதே வேளை சட்டத்தரணி பஹீஜ் போட்டியிட இருந்த அக்கரைப்பற்று நகர பள்ளி வட்டார வேட்பாளராக அங்கு எதிரணி வேட்பாளராக சிறாஜ் மசூர் போட்டியிட்டதால் அதாஉல்லா தனது இரண்டாவது மகனான டில்சானை போட்டியிட வைத்தார். அது தேசிய காங்கிரஸின் வெற்றி வியூகமாகவும் அமைந்தது. அதன் பின்னர் அதாஉல்லா தனது மகனை மேயராகவும் தான் கட்டளையிட்டவுடன் ராஜினாமா செய்ய தயாராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அஸ்மி அப்துல் கபூரை பிரதி முதல்வராகவும் நியமித்தார்.

அந்த விடயத்துக்கு எதிராக மேயர் பிரதி மேயர் கனவுகளை சுமந்த சிலரால் டயர்கள் எரியூட்டப்பட்டுகட்சி தலைவருடைய கட்அவுட்களும் அக்கரைப்பற்றில் சிலரால் வீதியில் போட்டு எரிக்கப்பட்டது. இவ்வாறான சூழலில் கட்சி பரவலாக்கம் செய்யப்பட்டு கிழக்கு மாகாணம் முழுவதும் மக்கள் இணைந்து வருவதையும் அவதானிக்க கூடிய சூழ்நிலை உருவானது. பிளவின் இரண்டாம் கட்டம். ஏற்கனவே மாகாண சபைக்கு வேட்பாளராக சட்டத்தரணி பஹீஜ் நியமிக்க கட்சி தலைவரால் வாக்குறுதியளிக்கப்பட்டதாக பஹீஜ் உடைய தரப்பால் வெளிப்படையாக கூறப்பட்டு வந்த நிலையில் அதாஉல்லா சகி தான் வேட்பாளரென சிலர் கூறி வந்தனர்.

உதுமாலெப்பையின் முரண்பாட்டிற்கான புள்ளி. சட்டத்தரணி பஹீஜ் உதுமாலெப்பை ஆகிய இருவருக்குமிடையில் பல சந்திப்புகள் நிகழ்ந்து, தொகுதி அடிப்படையில் மாகாண சபை தேர்தல் நிகழ்ந்தால் அக்கரைப்பற்றில் சகி அதாஉல்லாஹ் போட்டியிட்டால் உங்களது இடம் பறி போகும் எனவும், கட்சி சென்ற முறை அஇமக யுடன் போட்டியிட்டிருந்தால் அட்டாளைச்சேனையில் ஆட்சி அமைத்திருக்க முடியுமெனவும், தங்களுடைய கருத்துக்களை கவனத்தில் கொள்ளாது அஸ்மி அப்துல் கபூரினுடைய கருத்தில் கொள்ளப்படுவதாவும் கூறப்பட்டு இவ்வாறான விடயங்களுக்கு காரணமானவர் அஸ்மி அப்துல் கபூர்தான் எத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கட்சி முக்கியஸ்தர்கள் சிலரையும் தம்மோடு இணைத்து கொள்ள சட்டத்தரணி பஹீஜ் முயற்ச்சித்த வேளை அவர்களால் செய்தி அதாஉல்லா அவர்களின் காதுகளுக்கு எட்டியது. குறிப்பாக இறக்காம அபிவிருத்தி குழு இணைத் தலைவர் மன்சூர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிபாஸ் மூத்த உறுப்பினர் உவைஸ், பாலமுனை வாகிட், புர்கான் ஜேபி, ஹுதா உமர் போன்றவர்களுடன் ரகசிய உரையாடல்கள் தலைவர் அதாஉல்லா விடம் பகிரங்கமாக உரையாடப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து கட்சியினால் ஏற்பட்ட விரிவாக்க நடவடிக்கையின் போது உதுமாலெப்பைக்கு வழங்கப்பட்ட பிரதி தலைவர் பதவியும், சட்டத்தரணி பஹீஜிக்கு வழங்கப் பட்ட பதவியும் அதாஉல்லா அவர்களை தூரப் படுத்துவற்காக நடவடிக்கை மேற்கொள்வதாக கருதி இதற்கான காரணமாக அஸ்மி அப்துல் கபூரின் கருத்துக்களை தலைவர் அதாஉல்லா அங்கீகரிப்பதாகவுமே இந்த பிளவு நடந்ததாக உறுதிப்படுத்த பட்ட கட்சி தகவல் கூறுகின்றன.

அதாஉல்லா உதுமாலெப்பை இருவருக்கான உறவு இவ்வளவுதானா? பஹீஜின் பதவி ஆசையா? அஸ்மியின் மீது இவர்கள் வைக்கும் குற்றச் சாட்டுக்கள் என்ன? அதாஉல்லா வின் மனநிலை என்ன? எதிர் பாருங்கள்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com