புலிகள் தோற்கடிக்கப்படுவதை காண்பதற்கு ஆவலுடன் இருந்தேன். திரைப்பட இயக்குனர் ஜூட் ரத்னம்
இலங்கையில் இறுதிப் போர் இடம்பெற்ற காலத்தில் எல்.டி.டி.ஈ தோற்கடிக்கப்படுவதை பார்க்க என்றுதான் விரும்பியதாக திரைப்பட இயக்கனர் ஜூட் ரட்ணம் தெரிவித்துள்ளார்.; பிபிசி உலக சேவையுடனான நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..
´டீமன்ஸ் இன் பெரடைஸ்´ என்ற தனது திரைப்படத்தின் மூலம் இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஜூட் ரத்னம் கூறியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போதான விடுதலைப் புலிகளிகளின் கொடூரமான செயல்கள் ஜூட் ரத்னம் விமர்சம் செய்துள்ளார்.
´சுவர்க்கத்தில் உள்ள பேய்கள்´ எனும் ´டீமன்ஸ் இன் பெரடைஸ்´ என்ற அவரின் இந்த திரைப்படத்தில் எல்.டி.டி.ஈ. அமைப்பை விமர்சனம் செய்துள்ளதுடன், யுத்த காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் இனவாத குழுக்கள் சம்பந்தமான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2017 ல் ´டீமன்ஸ் இன் பெரடைஸ்´ என்ற திரைப்படம் விமர்சகர்களின் வரவேற்பை பெற்றிருந்ததுடன், இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான ஜூட் ரத்னம் இயக்கிய முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தயாரித்ததற்காக தனக்கு சிலர் துரோகி பட்டம் வழங்கக்கூடும் என்று கூறுகிறார் ஜூட் ரத்னம் முன்னர் கூறியிருந்தார்.
தனது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாக இலங்கை உள்நாட்டுப் போரை சித்தரித்து 90 நிமிட ஆவணப் படமாக தயாரிக்கப்பட்டதே ´டீமன்ஸ் இன் பெரடைஸ்´ என்ற திரைப்படம்.
0 comments :
Post a Comment