உழைப்புக்கேற்ற ஊதியம் கோரிய ஆர்ப்பாட்டத்தில் பிராயச்சித்தம் கோரிய சிறிதரன்.
தோட்டதொழிலாளர்களுக்கு நியாயமான வேதனத்தை வழங்ககோரி தொழிற்சங்களும் பல அமைப்புகளும் இனைந்து தலவாகலையில் பாரிய ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டது. முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக 23.09.2018 இன்று ஞாயிற்றுகிமை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்த்திற்கு தலவாகலை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் தமது வியாபார ஸ்தாபனங்களை மூடி ஆதரவு வழங்கின.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சிறிதரன் கலந்துகொண்டு மூக்குடைபட்டார். மலையக மக்களை வடக்கத்தேயர்கள் என்ற பேச்சுவழக்கிலுள்ள தரம்குறைந்த வார்த்தை பிரயோத்தை பயன்படுத்தி சிறிதரன் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தார் என்பது யாவரும் அறிந்த விடயம். இவ்விடயத்தினால் விசனமடைந்த கிளிநொச்சியில் வாழ்துவருகின்றது மலையக மக்கள் எதிர்வரும் தேர்தலில் தகுந்த பதிலளிப்போம் என்று கங்கணம்கட்டி நிற்கின்றனர். தேர்தல்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பிராயச்சித்தம் கோரிவிடலாம் என்ற நப்பாஷையில் சிறிதரன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என நம்பிய இளைஞர்கள் சிறிதரனை பார்த்து ஊழையிட்டனர்.
தோட்ட தொழிற்சங்கங்கள் , சிவில் அமைப்புக்கள் மற்றும் ஆசிரியர் சங்கம் ஆகியோர் இனைந்து இந்த ஆர்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.
தோட்ட்தொழிலாளர்களுக்கு வழங்கபடுகின்ற ஒரு நாள் சம்பளமான 730 ரூபாவானது மாதம் ஒன்றுக்கும் 25 நாட்கள் வேலைசெய்தால் மாத்திரமே வழங்கப்படுவதாகவும், குறித்த நிபந்தனை நீக்கப்படவேண்;டும் என்றும் கோஷம் எழுப்பினர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தமானது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை முதலாளிமார் சம்மேளனத்துடன் கைச்சாத்திடபடுகிறது அதன் அடிப்படையில் முதலாளிமார் சம்ளேனத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நியாயமான சம்பளத்தினை பெற்று கொடுக்கவேண்டுமெனவும் இந்த ஆர்பாட்டத்தின் போது வலியுறுத்தபட்டது.
ஆர்பாட்டத்தின்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்ப மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதகிருஸ்னன், மற்றும் பெருந்திரளான தோட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் பழனிதிகாம்பரம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னன் ஆகியோர் தெரிவிக்கையில், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான சம்பளத்தை முதலாளிமார் சம்மேளனம் வழங்காவிடின் பாரிய ஆர்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டி நேரிடும்மென தெரிவித்தனர்.
இதேவேளை மக்கள் விடுதலை முன்னனியும் தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கபட வேண்டுமென வலியுறுத்தினர்.
0 comments :
Post a Comment