மக்களுக்கு குடிப்பதற்கு நீரில்லை. பிரதேச சபை உறுப்பினர்கள் போத்தல் தண்ணி கேட்டு சபையில் அமளி துமளி.
கரைச்சி பிரதேச சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஆளப்படுகின்றது. குறித்த சபையின் ஏழாவது அமர்வின்போது சபை உறுப்பினர்களுக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்ட போத்தல்களில் நீர் நிரப்பட்டு வழப்பட்டமையினால், புதிய போத்தலில் தண்ணி கோரி சபையை முடக்கினர் உறுப்பினர்கள்.
சபையின் தலைவர் அ. வேழமாலிகிதன் தலைமையில் அமர்வுகள் ஆரம்பமானபோதே, இவ்வாறு நடைபெற்றுள்ளது. மக்கள் ஒருநேர உணவிற்காக துயரப்பட்டுக்கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் மக்களின் பிரதிநிதிகளாக, அவர்களது தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கூடப்பட்ட அமர்வு போத்தல் தண்ணீருக்காக சண்டையிட்டு நிறைவு பெற்றுள்ளது.
அமர்வில் கலந்து கொண்ட சகல உறுப்பினர்களும் கட்சி பேதம் இன்றி தங்களுக்கு புதிய போத்தல் தண்ணீர் வேண்டும்மென்று கூக்குரல் இட்டனர். ஜக்கியதேசிய கட்சியின் உறுப்பினர் மருத்துவர் விஜயராஜன், நாங்கள் சுகாதாரத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம் , ஆனால் இங்கு சுகாதாரத்திற்கு முற்றிலும் புறம்பான செயற்பாடு இடம்பெறுகிறது என்றும் இந்த போத்தல்கள் ஒரு தடவை மாத்திரமே பயன்படுத்தப்படல் வேண்டும் என்றும் அதற்கேற்ற வகையில்தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அத்தோடு சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அசோக்குமாரும் தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இன்று சுகாதாரத்தை பற்றி பேசுகின்ற மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்கப்படுகின்ற கேள்வி யாதெனில், இச்சபையில் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் வழங்கப்படுகின்ற நீர் தொடர்பில் எப்போதாவது பேசப்பட்டுள்ளதா?
0 comments :
Post a Comment