Tuesday, September 25, 2018

பள்ளிவாயல் கட்டுமான நிதியை திருடிய நிர்வாகத்தினர் மீது விசாரணை.

மன்னார் டவுன் ஜும்மாஹ் பெரிய பள்ளிவாசல் காட்டுமான பணியில் பாரிய ஊழல் நடைபெற்று உள்ளதாக ஆதாரபூர்வமான ஆவணங்களுடன் அரசியல் பிரமுகர் குவைதிர் கான் அவர்களினால் வக்பு சபையிலும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அவரது முறைப்பாட்டின் பிரகாரம் மன்னார் டவுன் ஜும்மாஹ் பெரிய பள்ளிவாசலின் கட்டுமானப் பணியின்போது இருந்த பழைய நிருவாகத்தினர்களையும், இன்றைய புதிய நிருவாகத்தினர்களையும் விசாரணைக்காக வருமாறு வக்பு சபையினர்களினால் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

அதன்பிரகாரம் இன்று மாலை மன்னார் நகர ஜும்மாஹ் பெரிய பள்ளிவாசலின் பழைய மற்றும் புதிய நிருவாகத்தினர்கள் விசாரணைகள் செய்யப்பட உள்ளார்கள்.

இந்த விசாரணைகள் அரசியல் தலையீடுகளின்றி மிகவும் நேர்மையாக நடைபெற்றால் ஊழல் விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் யார் ? பள்ளிவாசல் நிருவாகத்தினர்களா ? அல்லது அரசியல்வாதியா ? கட்டுமானப்பணியில் ஈடுபட்ட நிறுவனம் யாருக்கு சொந்தமானது ? பணம் எங்கிருந்து பெறப்பட்டது ? எத்தனை நாடுகள் இதற்காக நிதி வழங்கியது ? போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

அவ்வாறில்லாமல் அரசியல் தலையீடுகளுக்கு கட்டுப்பட்டு விசாரணைகள் நடைபெறுமாக இருந்தால், விசாரணைகள் என்ற நாடகத்துடன் அனைத்து உண்மைகளும் மூடி மறைக்கப்பட்டுவிடும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட குறித்த பள்ளிவசலானது 2014.11.24 ஆம் திகதி ராப் பவுண்டேசனால் முதன் முறையாக திறக்கப்பட்டது. அத்துடன் கல்வெட்டும் பதிக்கப்பட்டது. அதே பள்ளிவாசல் மீண்டும் இரண்டு தடைவைகள் திறக்கப்பட்டது. மீண்டும் மூன்றாவது தடவையாக சுபாஹ் நேரத்தில் அரபி சேக் ஒருவர் மூலமாக திறக்கப்பட்டது. அதாவது ஒரே பள்ளிவாசல் பல தடவைகள் திறந்துவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணையானது கொழும்பு டிபீ ஜாயா மாவத்தையில் அமைந்துள்ள வக்பு சபையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com