புலிகளை மீண்டும் அழைத்த விஜயகலாவை அழைக்கின்றது நீதிமன்று.
புலிகளமைப்பு இலங்கையிலிருந்த காலத்தில் இந்நாட்டில் குற்றச்செயல்கள் இடம்பெறவில்லை என்றும் புலிகள் மீண்டும் வரவேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் கருத்துரைத்ததுடன் அவர் பதவியிழந்தது யாவரும் அறிந்தது.
தெற்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த குறித்த சம்பவம் தொடர்பில் விஜயகலாவிற்கு எதிராக வழக்கு தொடர்பு செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியிருந்தார் சபாநாயகர்.
இந்நிலையில் விஜயகலாவிற்கு எதிராக வழக்கு தொடருமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுதந்தரவுக்கு சட்டமா அதிபரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
விஜயகலா, குற்றவியல் சட்டத்தின் 120ம் சரத்துக்கு அமைய குற்றமிழைத்துள்ளார் எனவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், அரசியலமைப்பின் 157வது அத்தியாயத்தை மீறியுள்ளதாகவும், அது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயின் இனவாதத்தையே மூலதனமாக கொண்டுள்ள அரசியல்வாதிகட்டு இது இருபக்க லாபத்தை கொடுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வடக்கில் புலி ஆதரவாளர்களின் அனுதாப வாக்குகளுக்கு விஜயகலாவிற்கு இச்சம்பவம் இடம்விடும் என்றும் மறுபுறத்தில் புலிகள் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனது உறுப்பினர்களாக இருந்தாலும் கடும் நடடிவக்கை எடுக்கும் என தெற்கின் வாக்குகளைக் கவரும் அவ் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
0 comments :
Post a Comment