தொழில் தருவதாகக் கூறி வேலையில்லா பட்டதாரிகளை ஏமாற்றும் திட்டம்! – வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்
தற்போதைய அரசாங்கம் ஆயிரக்கணக்கான வேலையில்லா பட்டதாரிக்களுக்கு பொய் கூறி அவர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவது இன்று நடைபெற்ற தொழில் வழங்கும் நிகழ்வின் மூலம் தெரிய வருகின்றதென ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் குறிப்பிடுகிறார்.
வேலையில்லா பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வழங்குவதாகக் கூறிய தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதியும் பிரதமரும் இன்று 4100 பட்டதாரிகளுக்கு மாத்திரம் தொழில் வழங்கி கண்காட்சி நடத்துகிறார்கள்.
2012 மார்ச் 31ம் திகதியின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் மூன்று வருடங்களும் தற்போதைய மைத்திரி – ரணில் ஆட்சியின் கீழ் மூன்று வருடங்களும் என்ற வகையில் பட்டதாரிகளுக்கு 6 வருடங்கள் தொழில் இல்லாமலிருக்க நேர்ந்த்து.
ஆகவே 58000த்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொழில் இல்லாமல் வரிசையில் காத்திருக்கின்றனர். ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் என்ற வகையில் 2013 வருடம் பட்டதாரிகளின் பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் தீர்வு கேட்டு போராடத் துவங்கியது. தொழில் வழங்குவதற்கான வருடாந்த வேலைத்திட்டமொன்று அவசியமெனவும், சகல பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்குமாறும் கேட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தென்னே ஞானானந்த தேரர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment