பதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்
கடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில டாண் ரிவி யின் இயக்குனர் குகநாதன் அவர்களால் தொகுத்து புத்தகமாக்கப்பட்டிருக்கின்றது. „மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக ... „ எனப்பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தின் அறிமுகமும் மீளாய்வும் இன்று சூரிச் நகரில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் தமிழர் போராட்டத்தில் இடம்பெற்ற வஞ்சகங்கள், தவறுகள், சறுக்கல்கள், தந்திரங்கள், தொடர் தோல்விகள் என்பன தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட கட்டுரைகள் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் இன்றைய அவலநிலைக்கு சுகு அவர்கள் இலங்கை அரசு, புலிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கி சுட்டுவிரலை நீட்டுகின்ற அதே தருணத்தில் தங்களது வரலாற்றுத்துரோகங்கள் மீது எவ்வித மீள்பார்வையையோ அன்றில் சுயவிமர்சனத்திற்கு வழிவிட்டுள்ளமையையோ அவதானிக்க முடியவில்லை.
இந்நிலையிலேயே இன்றைய புத்தக மீள்அறிமுக நிகழ்வில் சமகால அரசியல் களநிலைதொடர்பில் சுகு எனப்படுகின்ற திருநாவுக்கரசு சிறிதரன் பேசவுள்ளார்.
இந்நிலையில் அவர் பின்வரும் விடயங்களுக்கு பதிலளிப்பார் என எதிர்பார்கின்றோம்.
புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு தொடர்பில் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் கட்டாய ஆட்சேர்ப்பினை இலங்கையில் அறிமுகம் செய்துவைத்த முன்னோடிகள் என்ற பெருமை ஈபிஆர்எல்எப் என்ற இயக்கம் அங்கமாக இருந்த த்றீஸ்டார் என்ற அமைப்பினையே சாரும். இந்நிய-இலங்கை ஒப்பந்த காலத்தில் ஈபிஆர்எல்எப் னர் மேற்கொண்ட கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் அடாவடித்தனங்களே புலிகளமைப்பிற்கு பெரிதும் ஆதரவைத்தேடித்தந்திருந்தது. மேலும் புலிகள் சக அமைப்புக்களை தடை செய்து அவர்களை கொலைசெய்து ஏன் சிலரை உயிருடன் டயர் போட்டு எரித்து புலிகள் தமது மனிதவிரோத செயற்பாடுகளை வெளிக்காட்டியிருந்தனர். மக்கள் புலிகள் மீது வெறுப்புக்கொண்டிருந்தனர். ஆனால் பின்னர் த்றீஸ்டார் வடகிழக்கிலாடிய பேயாட்டம் புலிகள் இவ்வமைப்புக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை சரியானதே என்ற நிலைக்கு மக்களை இட்டுச்சென்றது. இந்த வரலாற்று உண்மைதொடர்பில் புத்தகத்திலுள்ள 129 கட்டுரைகளில் எந்தக்கட்டுரையிலும் தகவல்களில்லை.
ஈபிஆர்எல்எப் இனரால் பலவந்தமாக சிவில்பாதுகாப்பு படைக்கென இணைக்கப்பட்ட இளைஞர்களை நடுத்தெருவில் கைவிட்டு இந்திய இராணுவத்துடன் தப்பியோடியபின்னர் புலிகளால் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் கொத்துக்கொத்தாக கிழக்கிலங்கையில் கொன்றுகுவிக்கப்பட்டனர். இவ்விளைஞர்களின் குடும்பத்தினருக்கு ஈபிஆர்எல்எப் பினரது பதில் என்ன ?
தமிழ்ப்பாசிஸம் மற்றும் அதற்கு துணைபோன ஊடகங்கள், அவற்றின் வறட்டுத்தன்மை தொடர்பில் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சமாதான காலத்தில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை ஊடகங்கள் „இனம்தெரியாதோர்' என்ற பதம்கொண்டு வெள்ளைபூசியதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வயோக்கியத்தனத்தின் பிதாமகனாக செயற்பட்ட சிவராமிற்கு விழாவெடுக்கும் ஊடகவிபச்சாரிகளுடன் சுகு கள்ளதொடர்பு வைத்திருக்கின்றார் என்பது சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற புத்தகவெளியீட்டில் அம்பலமாகியதுடன் இன்று இடம்பெறவுள்ள சுகுவின் புத்தக அறிமுக நிகழ்விலும் புலிப்பாசித்திற்கு தீனிபோடுமொருவரே பிரதான பாகம் வகிக்கின்றார். எனவே சுகுவின் எழுத்துக்கும் செயலுக்குமிடையிலான முரண்பாடு தொடர்பில் விளக்கம் தேவைப்படுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ்பாசிஸத்தின் முகவர்கள் என தொடர்ச்சியாக தெரிவித்துவருகின்ற சுகு, த.தே.கூ வின் வாசல்படியில் சீட்டுக்கேட்டு தவம்கிடக்கின்றார். சீட்டுக்கிடைத்துவிட்டால் சுகுவும் பாசிஸத்தின் ஏஜன்ராவார் என்பதில் எவ்வித ஐயமும் காட்டாததன் பின்னணிபற்றியும் எதிர்பார்கின்றேன்.
0 comments :
Post a Comment