Monday, April 2, 2018

கந்தன் கருணை.

அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எல்லாம் புலிகளுக்கு, எது வேண்டுமானாலும் அவர்களே எடுத்துகொள்வார்கள், கேட்டால் கொல்வார்கள், அதன் பெயர் மக்களுக்கான போராட்டம்

இந்த மக்களுக்கான போராட்டத்தில் அடவாடியாக யாழ்பாணத்தில் இருந்த ஒரு செல்வந்தரிடம் இருந்து பறிக்கபட்டது “கந்தன் கருணை” என பெயரிடபட்ட பெரும் வீடு, ஒரு செல்வர்க்கானது, அவரை விரட்டிவிட்டு புலிகள் அபகரித்துகொண்டார்கள், அது புலிகுகை ஆயிற்று.

அதில் மாற்றியக்க போராளிகள் சுமார் 70 பேர்வரை விசாரணைக்காக அடைக்கபட்டனர், அவர்களும் தமிழர்கள், அதே மக்களுக்காக போராட வந்தவர்கள், ஆனால் புலிகள்முன் துரோகிகள் இவர்கள் போக புலிகளுக்கு கப்பம் மறுத்தவர்கள், எதிர்த்தவர்கள், ஆலோசனை சொன்னவர்கள், சாபமிட்டவர்கள் எல்லாம் ஆங்காங்கு அடைத்துவைக்கபட்டனர்.

இது சகோதர இயக்கங்கள் சிறைவைக்கபட்ட இடம்..

விசாரணை என்றால் ஒன்றுமல்ல, அந்த மாற்றுகுழுவின் தலைவன் எங்கிருக்கின்றான், ஆயுதம் எங்கிருக்கின்றது என போட்டு அடிப்பது, சித்திரவதை செய்து அடிப்பது, இதன் பொறுப்பாளர் பொட்டு அம்மான், அவருக்கு கீழே பல அடியாட்கள் உண்டு.

இந்த வீட்டிற்கு காவலாக வந்தவன் அருணா எனும் புலி. இந்த அருணா முன்பு பிரபாகரனுடன் இருந்தார், பின் சண்டையில் சிங்களபடையிடம் பிடிபட்டான், பின் சந்திரிகாவின் கணவரின் முயற்சியில் யுத்த கைதிகள் பறிமாறியபொழுது மறுபடி புலிகளோடு வந்தார்.

பிரபாகரன் தன் நிழலையும் சந்தேகிப்பவர், இந்த அருணாவிற்கு சிங்களன் ஏதும் சொல்லி அனுப்பியிருக்கலாம் என அருகில் சேர்க்கவே இல்லை, ஒரு அல்லக்கை போல அலைந்தார் அருணா.

தினமும் அந்த சிறைபட்ட போராளிகளை போட்டுசாத்துவது அவரின் அன்றாட பணி.

அன்றைய காலகட்டத்தில் புலிகளுக்குள் அதிகாரபோட்டி நிலவியது, பிரபாகரன் தமிழகத்தில் இருக்கும்பொழுது புலிகள் கட்டுபாடு கிட்டுவிடம் இருந்தது, கிட்டுவிற்கும் மாத்தையாவிற்கும் ஆகாது. பிரபாரனுக்கோ கிட்டு மீது ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது, அவர் அப்படித்தான்

இந்நிலையில் தன் காதலியினை பார்க்க சென்ற கிட்டுவின் மீது குண்டு வீசபட்டு காலினை இழக்கின்றார்.

இதே கிட்டு முன்பு சிங்கள வீரனின் காலை குண்டுவீசி துண்டித்ததும், பின் அந்த காலை நல்லூர் கந்தசாமி கோவில் வாசலில் வீரசாட்சியாக ரத்தம் சொட்ட சொட்ட காட்சிக்கு வைத்த காலமும் உண்டு.

கோவில் வாசலில் இப்படி செய்யாதீர்கள், இது ஆண்டவனுக்கே அடுக்காது என பலர் சொன்னபொழுது கிட்டு அவர்களை துப்பாக்கி முனையில் விரட்டிய காலமும் உண்டு

தெய்வம் நின்று குண்டு வீசியது..

குண்டை வீச திட்டமிட்டதும், வீசியதும் புலிகளின் உட்கட்சி விவகாரம், அதில் பல மர்மம் உண்டு, பிரபாகரனின் நண்பன் மீது கைவைக்க பிரபாகரனின் அனுமதி இன்றி எப்படி? என்ற சர்ச்சை அன்றே உண்டு. ஆனால் அது வேறு யாரோ வீசியது என கதை கட்டினார்கள் புலிகள், விஷயம் அருணா காதுக்கும் சென்றது. அவ்வளவுதான் ஆங்கில படங்களில் வரும் ஹீரோ போல (புலிகளுக்கு அடிக்கடி ஆங்கில யுத்தபடம் காட்டபடுவதுண்டு) இரு மெஷின்களை கையில் எடுத்து கந்தன் கருணை இல்லம் புகுந்தான் அருணா.

அந்த கொடூரம் அரங்கேறிற்று

அங்கு இருந்த கைதிகள் மீது சுட தொடங்கினான், அவர்கள் அலறினார்கள், கதறினார்கள், காலில் விழுந்து அரற்றினார்கள், சிலருக்கு வாயிலே சுட்டான் சண்டாளன்.

மாடிக்கும் தளத்திற்க்கும் ஓடி ஓடி சுட்டான், அவன் களைத்ததும் அடுத்தவனை அழைத்டு சுட சொன்னான், சிலர் உயிர்தப்ப சமையலறை போன்ற இடங்களில் பதுங்கிகிடந்தனர்

எண்ணி எண்ணி தேடினர், தப்பியவர்களை கண்டனர், அழைத்து வைத்து சுட்டனர்

அவர்கள் நிலை எப்படி இருக்கும் என எண்ணிபாருங்கள்?, யார் இந்த அநியாயத்தை கேட்க, தடுக்க முடியும்? ஒருவரும் இல்லை

ஏராளமான அப்பாவி போராளிகள் காரணமின்றி உயிர்விட்டனர், அவர்கள் செய்த தவறென்ன? போராட வந்தது, தமிழீழம் அமைய சிங்களனுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தியது

இன்னும் கொடூரமாக அரைகுறை உயிரோடு இருந்தவர்களை தலையிலே சுட்டு கொன்றார்கள், ஒருவன் மட்டும் தப்பினான்

அவன் சொன்ன சொல்தான் மானிட அவலத்தின் உச்சம்.

எல்லோரும் சாகும் பொழுது ஆடு அறுக்கும்பொழுது வரும் சத்தம் போலவே முணகி செத்தார்கள்,

அந்த குரல் என் காதில் அடிக்கது என் காதில் ஒலித்து என்னை நிலைகுலைய செய்யும் என்னால் அதிலிருந்து மீளமுடியவில்லை

இவ்வளவு கொடூரம் நடந்தபின் , அவர்களை சாவாகசமாக கொண்டு எரித்துவிட்டு வந்தனர் புலிகள்

விஷயம் லேசாக கசிந்தபொழுது புலிகள் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார்கள் “அவர்கள் தப்ப முயன்றதால் நடவடிக்கை எடுக்கபட்டது, இருவர் மட்டும் பலி”

எப்படி இருக்கின்றது? இதுதான் புலிகள் நடத்திய போர், சொந்த மக்களையே கொன்று குவித்த சாகசம், தியாகம்,வீரம் இன்னபிற‌ இன்று சிங்களனிடம் சரண்டைந்த புலிகளை காணவில்லை, அதனால் ரஜினி போக கூடாது என திருமாவும் இன்னும் சிலரும் ஒப்பாரி வைக்கின்றனர்.

அன்று புலிகளிடம் சரணடைந்த தமிழர்களும் இப்படித்தான் காணாமல் போனார்கள். இந்த விவகாரம் அப்படியே அடக்கபட்டு பின் புலிகள் யாழ்பாணத்தை போட்டு ஓடிய பின்பே வெளிவந்தது,

தண்ணீர் லாரியில் வெடிகுண்டு நிரப்பி தாக்குவது அவர்கள் ஸ்டைல், ஒரு நாள் அது குடியிருப்பு அருகே வெடித்தது 50 தமிழர்கள் அங்கேயே செத்தர், புலிகள் ஜஸ்ட் டெக்னிக்கல் பால்ட் என சொல்லிவிட்டு சென்றனர், இப்படி ஏராள சம்பவம் உண்டு

இந்த படுகொலை சம்பவம் பாருங்கள், போராட வந்ததும் தமிழர்கள், சிறைபிடித்தவனும் சிறைபிடிக்கபட்டவனும் தமிழன், கொன்றவனும் தமிழன், கால் போனவனும் தமிழன், அவன் காலை உடைத்தவனும் தமிழன்..

இப்படி நடந்ததன் பெயர்தான் ஈழமக்களுக்கான போராட்டம்.

கந்தன் கருணை மாதிரியான‌ ஏராள சம்பவங்கள் உண்டு, கொஞ்சம் ஆழமாக பார்த்த்தால் சிங்களனை விட அதிகமான தமிழர்கள் புலிகளால் பாதிக்கபட்டிருக்க்கின்றார்கள். இதனை எல்லாம் நாம் சொன்னால் துரோகி. இப்படி மக்களின் வீட்டை அபகரித்து புலிகள் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல, பணம், வீடு, சொத்து , குழந்தைகள் என எதனை அவர்கள் விட்டார்கள்?

அப்படி மக்களின் வீட்டை அபகரித்துகொண்டு சிங்கள படையினை தாக்குவார்கள், அவன் திருப்பிதாக்குவான் வீடு இடியும் புலிகள் அவர்கள் போக்கிற்கு ஓடுவார்கள். அந்த வீடுகளை கட்டிகொடுக்கும் விழாவிற்குத்தான் ரஜினி செல்ல இருந்தார், அதற்குள் திருமா கும்பல் பொங்கிற்று.

இந்த கந்தன் கருணை சம்பவம் எல்லாம் சொல்வார்களா என்றால் சொல்லமாட்டார்கள்.

“கந்தன் கருணை” படுகொலை ஒரு எடுத்துகாட்டு, அது வெளிவந்தது. அதனைபோல வெளிவராத கொடூரங்கள் ஏராளம் உண்டு

அந்த அருணா என்ன ஆனான்? பின் இந்திய அமைதிபடை சென்று அவனை சுட்டு கொன்றது, இதுதான் இந்திய அமைதிபடை இலங்கையில் செய்த அட்டகாசம்..

கிட்டு என்ன ஆனான்? மிக தந்திரசாலி என தன்னை எண்ணிய அவன் அமைதிபடை காலத்தில் இந்திய நண்பன் போல நடித்து, ராஜிவ் கொல்லபடுவதற்கு கொஞ்ச நாளைக்கு முன்பு டெல்லியில் சென்று பார்க்குளவு இந்தியாவின் மதிப்பினை பெற்றான்

1987பிரபாகரனுக்கு குண்டு துளைக்காத சட்டையினை பரிசாக கொடுத்த ராஜிவ், கொல்லபடுவதற்கு கொஞ்ச‌ நாட்களுக்கு முன்பாக அவனை டெல்லியில் கார் வரை வந்து வழியனுப்பினார்.

அந்த அப்பாவி தலைவன் அப்படி எல்லோரையும் நம்பி செத்திருக்கின்றான். அந்த கிட்டு கொடுத்த நம்பிக்கையே புலிகளால் தனக்கு ஆபத்து இல்லை என அவரை நம்ப வைத்து, தைரியமாக சென்னைக்கு வரவழைத்தது.

அப்படிபட்ட நயவஞ்சக கிட்டுவினை இந்திய கடற்படை கப்பலோடு கொன்றது. ஆக அப்பாவி தமிழர்கள் சாக காரணமான‌ கந்தன் கருணை சம்பவத்திற்கு காரணமான அருணாவினையும், கிட்டுவினையும் தண்டித்தது சிங்களனோ, பிரபாகரனோ அல்ல‌ மாறாக இந்தியா இப்படி பெரும் துரோகம் செய்தது இந்தியா, நம்பிகொள்ளுங்கள்

இந்த கந்தன் கருணை இல்லம், சொந்த மக்களின் மேலே புலிகள் நிகழ்த்திய கொடூரத்திற்கு சுவடாய் இன்னும் அங்கே நிற்கின்றது

நிச்சயமாக அது ஒரு நினைவிடம், பெரும் அடையாளம், புலிகளின் காட்டுமிராண்டி தனத்தின் ஆறா தழும்பு.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com