Saturday, December 31, 2016

சம்பந்தன் , சுமந்திரன் மற்றும் விஜயகலாவை கைது செய்ய முடியும்- நாலக்க தேரர்.

இலங்கை அரசியல் யாப்பின் 6 சரத்தின் பிரகாரம் ஐக்கிய இலங்கைக்கு எதிராக கருத்து வெளியிடுகின்ற சம்பந்தன் , சுமந்திரன் மற்றும் விஜயகலாவை கைது செய்யமுடியுமென தேசிய உரிமைகள் சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய பெங்கமுவ நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.

உலக இலங்கையர்கள் சம்மேளனத்தின் வருடாந்த ஒன்று கூடலில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு கூறிய தேரர் தொடர்ந்து பேசுகையில் : இன்று ஐக்கிய இலங்கைக்கு எதிராக பேசுகின்றவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. பாராளுமன்ற உறுப்பிரான சுமந்திரன் ஐக்கிய இலங்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கின்றார், சம்பந்தனும் அவ்வாறே கூறுகின்றார். ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்தால் அவர் இன்று இந்த அரசாங்கத்தில் பிரதமராக இருப்பார் என்று கூறுகின்றார்.

இலங்கை அரசியல் யாப்பின் ஆறாம் பிரிவின் பிரகாரம் நாம் செயற்படுவோமாயின் இவர்கள் மூவரையும் சிறையிலடைக்க முடியும். நாம் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும் பிரபாகரன் தற்செயலாகவேனும் யுத்தம்புரிந்து இந்நாட்டை பிடித்திருந்தால் அதை நாம் யுத்தமொன்றினூடாக மீண்டும் பிடித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் நாம் மாநில சுயாட்சி ஒன்றை கொடுத்தால் அதை ஒருபோதும் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது. ஆகவே நாம் வரவிருக்கின்ற அரசியல் யாப்பு திருத்தத்தை முழுமையாக தோற்கடிக்கவேண்டும். தற்போது அரசியல் யாப்பு திருந்தத்திற்காக 6 முன்மொழிவுகள் செய்யப்பட்டிருக்கின்றது. அதில் எதுவுமே நாட்டு சிறந்தது என்று கூறுவதற்கு எம்மால் முடியாது. எனவே இம்முன்மொழிவுகளை பாராளுமன்றத்திலேயே தோற்கடிக்கவேண்டும். இதற்காக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கு செல்ல இடமளிக்க அவசியம் கிடையாது.



No comments:

Post a Comment