Tuesday, July 12, 2016

இலங்கையின் உத்தியோகபூர்வமொழி சிங்களம் மட்டுந்தானா?

சர்வதேச சுற்றுலா அமைப்பினால் (UNWTO) இம்முறை பாசிக்குடாவில் கருத்தரங்கொன்று நடாத்தப்படுகின்றது. இம்முறை நடாத்தப்படுகின்ற கருத்தரங்கில் வெளிநாட்டைச் சேர்ந்த பெரும்பான்மையினர் கலந்துகொள்ளவுள்ளனர். இன்று (12) மற்றும் நாளை (13) இருநாட்களும் இக்கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. ஆயினும், கருத்தரங்கம் நடைபெறும் நடைபெறும் நாடாகிய இலங்கைக்கான அழைப்பினைப் பார்க்கும்போது, “சிங்களவர்களுக்கு மட்டும்” எனும் மனோநிலை மீண்டும் எழுந்துள்ளதைக் காணக்கூடியதாய் உள்ளது, அதாவது, இலங்கையின் உத்தியோகபூர்வ மொழி சிங்களம் எனவும், ஆங்கிலமும் பயன்பாட்டில் உள்ளது எனவும் குறிப்பிட்ட அதிகாரிகளினால் குறிப்பிடப்பட்டுள்ளது என மனித உரிமைச் செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய ருக்கி பெர்னாண்டோ தெளிவுறுத்துகிறார். ஒருமைப்பாட்டை அடிப்படையாக வைத்து நடாத்தப்படுகின்ற கருத்தரங்கம் என்ற தோரணையில் நடாத்தப்படுகின்ற இந்நிகழ்வு சிந்திக்க வேண்டிய விசயமே.

மேலும், சர்வதேச ரீதியாக நடைபெறும் சுற்றுலாக் கருத்தரங்கம் இலங்கையில் நடைபெறும்போது, கற்பிட்டி, குச்சவெலி, பானம், பாசிக்குடா, இருதெனியாய, காங்கேசந்துறை போன்ற பகுதிகளில் காணிகள் இல்லாமல் போன மக்கள் நேற்று (11) கொழும்பில் ஒன்றுகூடி, முதலில் எங்கள் இடங்களை எங்களுக்குப் பெற்றுத் தாருங்கள். எங்கள் உரிமைகளை எங்களுக்குப் பெற்றுத் தாருங்கள், பிறகு சுற்றுலாத்துறையைப் பாருங்கள்” எனக் குறிப்பிட்டனர். அங்கு பானமப் பகுதிகளில் காணிகள் அற்றுப் போனோருக்காக கருத்துத் தெரிவித்த சோமசிரி புஞ்சிரால என்பவர், “குறைந்தளவு எங்கள் காணிகள் (இடங்கள்) தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானித்திற்கு ஒப்ப செயற்படாமல், இவ்வாறான சுற்றுலாத்துறைக் கருத்தரங்கு நடாத்துவது தொடர்பில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். மேலும், எங்கள் காணிகளை எங்களுக்குப் பெற்றுத் தந்துவிட்டு சுற்றுலாத்துறையைக் கவனிக்க வேண்டும்” எனவும் கருத்துரைத்தார்.

“தற்போது நடைபெறுகின்ற பாசிக்குடாவிற்கோ அன்றி, ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கோ சரியான பிரதிநிதித்துவம் அங்கு இல்லை” எனவும் ருக்கி பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கிறார்.

நன்றி - விகல்ப இணையத்தளம் on July 11, 2016

தமிழில் - கலைமகன் பைரூஸ்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com