கனடியத் தமிழர்கள் ரொரான்ரோ புலனாய்வுப் பிரிவினரின் LTTE க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவி வருகிறார்கள். பந்துல ஜயசேகரா
நான் ரொரான்ரோ பொலிசாருடனும் மற்றும் கனடாவில் எல்.ரீ.ரீ.ஈ யின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்டுவரும் புலனாய்வு பிரிவினருடனும் நெருக்கமாக வேலை செய்து வந்தேன். அவர்கள் எப்போதும் எங்களுக்கு ஆதரவாக இருந்ததுடன் ஸ்ரீலங்காவின் பிரச்சினைகளைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார்கள். ஒருமுறை நான் ரொரான்ரோ காவல் நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஒன்றிணைந்த தேசிய பாதுகாப்பு பிரிவு நபர்கள் மற்றும் றோயல் கனடியன் மவுன்ட்டட் பொலிசின் (ஆர்.சி.எம்.பி) நிதி புலனாய்வு குழவினருடனும் நடத்திய கலந்துரையாடலில் அவர்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக ஸ்ரீலங்கா தமிழ் கனடியர்களை ஆட்சேர்ப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
கனடிய காவல்துறையினருடன் அநேக ஜனநாயக எல்.ரீ.ரீ.ஈ விரோத ஸ்ரீலங்கா தமிழ் கனடியர்கள் பணியாற்றி வந்தார்கள். எனினும் அவர்களில் பலர் அந்த பிரிவுகளுடன் நெருக்கமாகப் பணியாற்றவும் மற்றும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதையும் நாங்கள் பெரிதும் விரும்பினோம். கனடிய சட்ட அமலாக்க அதிகாரிகள் தாங்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினையாக இருப்பது, எல்.ரீ.ரீ.ஈ யின் நடவடிக்கைகள் பற்றி புகார் தெரிவிப்பதற்கு அநேக தமிழர்கள் அச்சம் அடைவதுதான் என்று என்னிடம் தெரிவித்தார்கள். ஒருக்கால் அந்த வட்டாரங்களிலிருந்து நம்பிக்கையான அதிக தகவல்கள் கிடைத்தால் அவர்கள் அதிக கைதுகளை மேற்கொள்ளலாம் என விரும்பினார்கள். கனடாவில் சட்டத்தை மதிக்கும் தமிழர்களிடத்தில் எந்தளவு அச்சத்தை எல்.ரீ.ரீ.ஈ ஊற்றெடுக்க வைத்துள்ளது என்பதும் கூட அவர்களுக்குத் தெரியும். அந்த நேரத்தில் றோயல் கனடியன் மவுன்ட்டட் பொலிஸ் மற்றும் ரொரான்ரோ காவல்நிலைய புலனாய்வு பிரிவினர் ஆலோசனை தெரிவித்தது ஸ்ரீலங்கா கால்துறை மற்றும் புலனாய்வு பிரிவுகள் தங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினால் அதன் காரணமாக இரு நாடுகளும் அதிகளவு தகவல்களை பெற்று பயங்கரவாதிகளையும் மற்றும் அவர்களது ஆதரவாளர்களையும் தண்டிப்பதற்கு உதவும் என்று.
அமெரிக்;காவுடன் அவர்கள் கைச்சாத்திட்டிருந்த இத்தகைய ஒரு உடன்படிக்கையின் நகல் ஒன்றும் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியாது. இந்த இடத்தில் நான்குறிப்பிட வேண்டிய ஒன்று, எனது காலத்தின்போது ஒட்டவாவில் பணியாற்றிய நிலந்த ஜயவர்தனா(இப்போது டி.ஐ.ஜி) மிகவும் சிறப்பாக பணியாற்றினார். அவர் எனக்கு ஒரு பலம்வாய்ந்த கோபுரமாகத் திகழ்ந்தார். நிலந்தவுக்கு ஒரு சேவை நீடிப்பு வழங்க வேண்டும் என்று நான் விடுத்த வேண்டுகோள் அலட்சியம் செய்யப்பட்டது மிகவும் பரிதாபமானது.
அணிதிரட்டல் மற்றும் ஜனநாயக ஸ்ரீலங்கா தமிழ் கனடியர்களின் உதவி மற்றும் ரொரான்ரோ பொலிசின் புலனாய்வு பிரிவின் கடினமான வேலை என்பனவற்றால் நாங்கள் பல வெற்றிகளைப் பெற்றோம். ரொரான்ரோ மேயர் டேவிட் மில்லர் தமிழர் கலாச்சார சர்வதேச இயக்கத்தின் (நன்கறியப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அமைப்புகளில் ஒன்று) கூட்டம் ஒன்றிற்கான அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். இந்த மாநாடு என்றழைக்கப்பட்ட நிகழ்வு ரொரான்ரோ, ஸ்கார்பொரோவில் உள்ள சிறி ஐயப்ப சமாஜம் இந்து ஆலயத்தில் 2008 ஜூலை 26 மற்றும் 27 ந் திகதிகளில் நடைபெற இருந்தது.
ஜனநாயக ஸ்ரீலங்கா தமிழ் கனடியர்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் அலுவலகங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அதை ரொரான்ரோ புலனாய்வு பணியகத்திற்கு அறிவித்தார்கள், அந்த அலுவலகம் எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் நடைபெறுவதாகவும் மற்றும் அந்த ஆலயம் எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அதன் முன்னணியினரால் நிர்வகிக்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்தன. நாங்களும் எங்கள் முயற்சிகளை மேற்கொண்டு மிஸிஸாகுவாவின் கௌரவ மேயர் ஹசல் மக்லியொன்னை அவரது நகரத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைமையில் நடைபெறவிருந்த ஒரு ஆதரவு ஊர்வலத்தில் கலந்து கொள்வதை தடுத்து நிறுத்தினோம்.
ஸ்ரீலங்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் இணைய வேண்டாம் என ருவான்டா – கனடா சங்கத் தலைவரை நாங்கள் சம்மதிக்க வைத்தோம், எனெனில் கனடாவிலிருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்குள்ள மற்றைய குழுக்களுடன் இணையவோ அல்லது வேலை செய்யவோ முயற்சிகளை மேற்கொண்டு மற்றும் அவர்களை மூளைச்சலவை செய்யவும் முயன்று வந்தது. ரொரான்ரோ பொலிஸ், 80, அல்ரோன் டவர் என்ற இடத்திலிருந்த ஒரு எல்.ரீ.ரீ.ஈ நிதி சேகரிப்பாளரின் முயற்சிகளை முறியடித்தது, இது தொடர்பாக ஒரு ஸ்ரீலங்கா தமிழ் கனடியர் அந்த இடத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை எனக்கு அறிவித்திருந்தார். அது போன்ற பல வெற்றிகளை நாங்கள் பெற்றிருந்தோம் மற்றும் கனடாவிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்று பலர் விரும்பினார்கள். அத்தகைய தகவல்களை வழங்குவோருடன் நாங்கள் தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருந்தோம்.
முதல்முறையாக எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்கள் செயற்கைகோள் வழியாக பிரபாகரன் ஆற்றும் உரையை கேட்பது தடுக்கப்பட்டது. கனடிய புலனாய்வு அதிகாரிகள் அதை அணுகுவதற்காக அயர்வின்றி உழைத்தார்கள் மற்றும் அந்த நேரத்தில் அது கனடாவில் ஸ்ரீலங்காவுக்கு கிடைத்த பெரிய வெற்றி. நிச்சயமாக கனடாவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு அது ஒரு மோசமான நவம்பராக இருந்தது. நாங்கள் மேலும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவை வீடியொ கன்பரன்ஸ் வசதி வழியாக ரொரான்ரோ மக்களுடன் உரையாட வைத்து அந்த நேரத்தில் ஸ்ரீலங்காவின் நிலவரம் பற்றி விளக்கமளிப்பதிலும் வெற்றி கண்டோம்.
எப்பொழுதும் எங்கள் பக்கம் நின்று எங்களுக்கு ஆதரவளித்த ஒரு கனவான் மெக்கென்ஸி நிறுவனத்தின் தலைவர் ஜோண் தொம்சன் ஆவார். எல்.ரீ.ரீ.ஈ அவரை வெறுத்தது, ஆனால் அவர் பதிலுக்கு அவர்களை வெறுத்தது மட்டுமன்றி அவர்களை வெளிப்படுத்தவும் செய்தார். எல்.ரீ.ரீ.ஈ யினால் ஜோணை எதிர்கொள்வது அத்தனை இலகுவாக இருக்கவில்லை. அவர் றோயல் கனடியன் இராணுவ நிறுவனத்தில் வைத்து மெக்கென்ஸி நிறுவன அங்கத்தவர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் நான் உரையாற்றுவதற்கும் ஏற்பாடு செய்திருந்தார், அதில் நான் சிறப்பாக உரையாற்றினேன். ஜோண் கனடிய தொலைக்காட்சியில் ஒரு வழக்கமான வர்ணனையாளராக இருந்தார், பயங்கரவாதம் பற்றிய அவரது ஆராய்ச்சி கட்டுரைகள் உலகளாவிய ரீதியில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. அவர் மிகுந்த தாராளத்துடன் சில கட்டுரைகளை த ஐலன்ட் பத்திரிகையில் பிரசுரம் செய்வதற்கு வழங்கியிருந்தார் மற்றும் சில பிரத்தியேக கட்டுரைகளை அந்த நேரத்தில் த ஐலன்ட்டுக்கு அனுப்பியும் இருந்தார்.
இந்திய மற்றும் அமெரிக்க தூதரக ஜெனரல்களுடன்; கூட நாங்கள் மிகவும் நெருக்கமாக பணியாற்னோம். எல்.ரீ.ரீ.ஈயினால் தூதுவராலயங்களுக்கு முன்னால் நடத்த திட்டமிடப்படும் ஆர்ப்பாட்டங்கள் பற்றி நாங்கள் முன்கூட்டியே அவர்களுக்கு தகவல்களை வழங்கி வந்தோம், அது இந்தியர்களாலும் மற்றும் அமெரிக்கர்களாலும் நன்கு பாராட்டப்பட்டது. அமெரிக்க தூதுரக நாயகம் ஜோண் நே மற்றும் அவரது உத்தியோகத்தர்கள் தங்களது பூரண ஒத்துழைப்பை எங்களுக்கு வழங்கினார்கள். அமெரிக்க எல்லை பிரிவு, நியுயோர்க் நகரத்தில் நடைபெறவிருந்த ஒரு எல்.ரீ.ரீ.ஈ ஆர்ப்பாட்டத்தை பலப்படுத்துவதற்காக கனடாவிலிருந்து நியுயோர்க் நோக்கி பயணமாக முயற்சித்த அநேக எல்.ரீ.ரீ.ஈ பேரூந்துகளை திருப்பி அனுப்புவதில் வெற்றி கண்டது.
நான் தொடர்ந்து ஸ்ரீலங்கா கனடியர்களுடன் மட்டும் தொடர்புகளைப் பேணுவது மட்டுமன்றி ஏனையவாகளுடனும் தொடர்பினை ஏற்படுத்தி வந்தேன். பல சந்தர்ப்பங்களில் ஏனை சமூகத்தினரது நிகழ்வுகள், பல்கலைக்கழகங்கள், சிறிய குழுக்கள் மற்றும் கலைச் சங்கங்களிலும் கூட உரையாற்ற என்னை அழைத்தார்கள். கனடியர்களுக்கும் ஏனையவர்களுக்கும் எங்களைப்பற்றி ஒரு தெளிவான படத்தை வழங்குவதற்கு அந்த வாய்ப்புகளை நான் பயன்படுத்தினேன். அவர்களுக்கு நான் ஸ்ரீலங்கா கனடியர்கள் ரொரான்ரோவிலும் மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் எவ்வாறு தொந்தரவுகளுக்கு உட்படுகிறார்கள் என்பதை விளக்கினேன். எங்கள் செய்தியை எல்லோருக்கும் பரப்பும்படி அவர்களிடம் நான் வேண்டினேன். நான் கிச்சனர், வாட்டாலூ, கலப், அக்ஷன், மில்ரன், கேம்பிரிட்ஜ், லண்டன் மற்றும் வன்கூவர் வரை கூட பயணமாகி எங்கள் செய்தியை எடுத்துச் சென்றதுடன் அங்கிருக்கும் சங்கங்கள் மற்றும் சமூகங்கள் உடன் நெருக்கமாகப் பணியாற்றினேன். ஒவ்வொருவரும் ஸ்ரீலங்காவின் பின்னால் அணி திரண்டார்கள். பாதுகாப்பு படையினருக்காக திரட்டப்பட்ட அபி வெனுவென் அபி (நமக்காக நாம்) நிதியத்துக்காக ஸ்ரீலங்கா கனடியர்கள் கிட்டத்தட்ட 90,000 டொலர்களைத் திரட்டினார்கள். ஸ்ரீலங்காவுக்கான எனது ஒரு விஜயத்தின்போது அந்தக் காசோலையை என்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்க இயலுமாக இருந்தது. அது கூட்டான ஒரு முயற்சி இரண்டு முன்னணி ஸ்ரீலங்கா கனடியர்கள் தங்களது சொந்த நிதியில் இருந்து ஒவ்வொருவரும் தலா 10,000 டொலர்களை அன்பளிப்புச் செய்திருந்தார்கள்.
0 comments :
Post a Comment