ஓட்டுண்ணிகளை கழட்டி விடுகின்றது தமிரசுக்கட்சி.
எதிர்வரும் மே தினப் பேரணியை தமிழரசுக் கட்சி தனித்து நடாத்த முடிவு செய்துள்ளது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதிரிக்கட்சிகளை தங்கள் பேரணிகளை தனித்து செய்யுமாறும் அக்கட்சிகளைக் கேட்டுள்ளது.
இச்செயற்பாடானது எதிர்வரும் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவதற்கான ஒத்திகையாக கருதப்படுகின்றது.
தனித்து மேதினக் கூட்டத்தினை நடாத்துவது என்ற முடிவு கடந்தவாரம் யாழ் சென்றிருந்த கட்சியின் தலைவர் சம்பந்தன் அவர்களால் ஏனைய கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டபோது அக்கட்சியினர் அதிர்ச்சிக்கு உள்ளானதாக அறியக்கிடைக்கின்றது.
கடந்தவருடம் மேதினக்கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயருடன் நடாத்தப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அவ்வாறு தமிழரசுக் கட்சி தனித்து நடாத்தினால் ஏனைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஓர் கூட்டம் நடாத்துவது என்று அக்கட்சிகள் ஆலோசித்து வருகின்றபோதும், எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை எனத் தெரியவருகின்றது.
உதிரிக்கட்சிகளைச் சேர்ந்த எவருக்கும் இங்கு பேச வாய்பளிக்கப்படவில்லை என்பதை இத்துண்ணுப்பிரசுரம் உறுதி செய்துள்ளது..
0 comments :
Post a Comment