இலங்கையில் பயங்கரவாதச் சட்டம் நீக்கப்படாது. பாதுகாப்புச் செயலர்.
இலங்கையில் பயங்கரவாதச் சட்டம் பாதுகாப்பு படையினருக்கு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்சியாக எழுந்துவருவதுடன் அச்சட்டம் நீங்கப்படவேண்டும் மென பல்வேறு சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையில் இந்சட்டத்தின் நீக்கம் தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் தொடுத்த கேள்வியொன்றுக்கு பதிலளித்த இலங்கையின் பாதுகாப்புச் செயலர், பயங்கரவாதத் தடை சட்டம் ஒரு போதும் நீக்கப்படாது எனவும் அவ்வாறு நீக்கப்பட வேண்டுமாயின், அதற்கு நிகரான அல்லது நாட்டைப் பாதுகாக்கக்கூடிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறான புதிய பலமான சட்டம் ஒன்று உருவாக்கப்படும் வரை பயங்கரவாதத் தடை சட்டம் நீக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
நீதியமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு இணைந்து புதிய சட்டமொன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதன் முதற்கட்ட வரைபுப் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன.
இந்நிலையில், பயங்கரவாத தடை சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டத்தை ஏற்படுத்வதற்கு தேவையான நிபுணத்துவப் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகளுடைய ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்த போதிலும் பொருளாதார, தொழில்நுட்ப ரீதியாக பயங்கரவாதம், சர்வதேசத்தின் மத்தியல் தலையெடுத்துள்ளன.
இதேவேளை, சாதாரண சட்டமொன்றை உருவாக்கி, நாடாளுமன்ற அனுமதியுடன் அமுலாக்க 8 மாதங்கள் வரை செல்லும்.
நாட்டின் பாதுகாப்புக்கான பாரிய சட்டத்தை உருவாக்க நீண்ட காலம் எடுக்கும். எனவே அவசரமாக அரைகுறையான சட்டத்தை உருவாக்க முடியாது.
இதேவேளை, விரைவாக பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இடமளிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment