Friday, April 22, 2016

"மயிர் கதையும் , மார்பில் பாய்ந்த கதையும்" - சகாதேவன்.

என்னை நம்புகிற மக்கள் ஈ பி டி பி யினரை நம்புவதில்லை எனத்தெரிவித்திருக்கின்றார் சந்திரகுமார்.

இது ஒரு நகைச்சுவை யான கருத்தாகும். இவர் சொல்வது உண்மையென்றால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா தோற்றிருக்க வேண்டும், சிவஞானம் சிறிதரன் படுதோல்வி அடைந்திருக்க வேண்டும், சந்திரகுமார் வெற்றி பெற்று அமைச்சராகி இருக்க வேண்டும்.

தமிழ் அரசியல் கட்சிகளை பிளவு படுத்தும் ஒரு சூழ்ச்சியின் வெளிப்பாடுதான் சந்திரகுமாரின் வெளியேற்றம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கு போட்டியில் டக்ளஸ் தேவானந்தாவை பின்னால் தள்ளிவிட்டு பாராளுமன்ற ஆசனத்தையும் ,கட்சியையும் கைப்பற்றுவது சந்திரகுமாரின் இலக்காக இருந்தது.

கடந்த தேர்தலில் மட்டுமன்றி கடந்த ஐந்தாறு வருடமாக சந்திரகுமார் டக்ளஸை ஏமாற்றி வந்துள்ளார் இதனை தனது " சொந்த காரணத்துக்காகவே அரசியலுக்கு வந்ததாக " கூறியதன் மூலம் வெளிப்படையாக கூறும் அளவுக்கு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் கொண்டவராக தன்னை இனங்காட்டிக்கொண்டார்.

டக்ளஸை வன்னிப்பகுதிக்கு வரவிடாமல் இவர் தந்திரமாக தடுத்தார் , கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இவர் செய்த சில காரியங்கள் கட்சியின் உறுதிப்பாட்டை குலைத்து கட்சியை படுதோல்விக்குள் தள்ளியது.

ஆனாலும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இருக்கும் நிரந்தர வாக்கு வங்கி கட்சியை காப்பாற்றியது. ஏனைய கட்சிகளின் தலைவர்கள் போல் டக்ளஸ் தேவானந்தா விருப்பு வாக்கு வேட்டையில் ஈடுபடும் ஒருவரல்ல.

இதற்கு பல தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்ட முடியும். உதாரணமாக 2001 பொதுத்தேர்தலில் ஈ பி டி பிக்கு கிடைத்த வாக்குகள் 57,208 ஆனால் டக்ளஸ் தேவானந்தா பெற்ற விருப்பு வாக்குகள் 9744 மட்டுமே. ஆனால் 2015 பொதுத்தேர்தலில் ஈ பி டி பி கட்சி பெற்ற வாக்குகள் 30232 டக்ளஸ் தேவானந்தா 16399 வாக்குகள் பெற்றார்.

இனி சந்திரகுமாரின் கதைக்கு வருவோம். தனது செல்வாக்கு பற்றி இவரது பேச்சு வெறும் "குடிகாரன் பேச்சு " மட்டுமே ( இவரது செல்வாக்கில் அன்ரி ஒருவர் கனகபுரத்தில் ஊரவனுக்கு அநியாயம் செய்து திறந்த சாராயக்கடை மூடியாச்சுதோ தெரியவில்லை )

அதாவது இவர் கூறிய தன்னுடைய செல்வாக்கு என்பது 2010 பொதுத்தேர்தலில் இவர் பெற்ற 8105 வாக்குகள் என்றால் இவரது செல்வாக்கு எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும். அதே 2010 பொதுத்தேர்தலில் சிவஞானம் சிறிதரன் பெற்ற வாக்கு வெறும் 10057 மட்டுமே.

நாடாளுமன்ற உறுப்பினர். ஆனால் குழுக்களின் பிரதித்தலைவர், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர், ஆளும் கட்சி உறுப்பினர் என்ற பல்வேறு பதவிகளையும் ஐந்து வருடங்களாக வகித்து வெட்டிப் புடுங்கியாழ்ப்பாணத்தில் சந்திரகுமார் 2015 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் வெறும் 4800 சொச்சமே .

ஆனால் ஒன்றுமே புடுங்காமல் வெறும் வாய் வல்லமையால் சிறிதரன் பெற்றது 72,058 வாக்குகள்.

2010 பொதுத்தேர்தலில் வெறும் 1900 வாக்குகள் மட்டுமே சந்திரகுமாரை விட அதிகம் பெற்று வித்தியாசம் இருந்த சிறிதரன், 2015 பொதுத்தேர்தலில் 67000 வாக்குகள் வித்தியாசம் பெற்று வெற்றி பெற சந்திரகுமாரின் மக்கள் செல்வாக்கு தான் காரணமோ என்னவோ?

ஈ பி டி பி யின் தோல்விக்கு காரணம் சந்திரகுமார் தான் இதனை மறைக்க இவர் பல காரணங்கள் கூறலாம் ..

இனிமேல் தனக்குள்ள தொடர்புகளை பயன்படுத்தி ஏதேனும் ஒரு அரசியல் கட்சியிலும் இணையக்கூடும் , அது சிறிலங்கா சுதந்திர கட்சியாகவே , ஐக்கிய தேசிய கட்சியாகவோ , தமிழ் தேசிய கூட்டமைப்பாகவோ இருக்கலாம்.

இதிலிருந்து சில உண்மைகளும் வெளிவரக்கூடும் , ஆனால் ஐந்து வருடமாக சந்திரகுமார் ஆடிய நாடகம் அறிந்த பொதுமக்கள் இவரை இனி ஏற்றுக்கொள்வார்களா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

எட்டப்பனையும் , காக்கை வன்னியனையும் , புருட்டஸையும் புறக்கணித்த உலகம் , கர்ணனையும் , கும்பகர்ணனையும் , விபீசணனையும் ஏற்றுக்கொண்டது , ஆனால் துரோகம் செய்த எவரையும் அல்ல. உள்ளே இருந்து முதுகில் குத்துபவனே துரோகி - எதிர்ப்பவன் அல்ல .

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com