சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம். இனவாதத்திற்கு இரையாகப்போகும் சம்பந்தனின் கண்ணீர்.
இன்று காலை கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருந்த எதிர்கட்சித் தலைவரின் கண்களிலிருந்து தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டபோது கண்ணீர் சொட்டியதாக நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
தேசிய நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் பாடுவது தொடர்பில் கடந்த காலங்களில் பல சர்ச்கைகள் உருவாகியிருந்த நிலையில் இன்று அதற்கு ஓர் முடிவு வந்துள்ளதை அவதானிக்க முடிந்தாலும், சம்பந்தனின் கண்ணீர் இனவாதிகளால் பல கோணங்களில் விமர்சிக்கப்படலாம் என்பதில் சந்தேகம் இல்லை.
அத்துடன் இலங்கையின் சம்பிரதாயத்தை எதிர்கட்சி தலைவர் கடைப்பிடிக்கவில்லை என்ற ஓர் பாரிய குற்றச்சாட்டும் சம்பந்ததன் மீது எழுந்துள்ளது. இலங்கையில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் சுதந்திர தினத்தில் எதிர்கட்சி தலைவருக்கு என்ற ஒரு தனி ஆசனம் ஒதுக்கப்படும். அதே நேரம் எதிர்கட்சி தலைவரும் தனது சுதந்திர தினச் செய்தியை மக்களுக்கு ஊடகங்கள் ஊடாக அன்றில் அறிக்கை ஊடாக வழங்குவார். ஆனால் எதிர்கட்சி தலைவர் காரியாலயத்திலிருந்து இதுவரை சுதந்திர தினச் செய்தி கிடைக்கப்பெறவில்லை என பல ஊடக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் எதிர்கட்சி தலைவரின் ஊடக இணைப்பாளரை ஊடகங்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதும் அது கைகூடவில்லை என தெரியவருகின்றது.
தமது மகன் கைது செய்யப்பட்டமை காரணமாக மஹிந்த ராஜபக்ச தம்மீது அவதூறான குற்றங்களை சுமத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகளும், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாச தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment