இலங்கை அவசரப்படத் தேவையில்லையாம். கூறுகின்றார் ஐ.நா பிரதிநிதி
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் அவசரப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உண்மை, நீதி மற்றும் வன்முறைகளை தடுத்தல் சம்பந்தமான விசேட பிரதிநிதி பேப்லோ டி கிரிப் (Pablo de Greiff) இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் சம்பந்தமாக தேடிப் பார்ப்பதற்கு கடந்த ஜனவரி மாதம் 26ம் திகதி முதல் பெப்ரவரி 01ம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த விசேட பிரதிநிதி வௌியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் எந்தவொரு நாடும் குறுகிய காலத்திற்குள் பொறுப்புக்களை நிறைவேற்றியதில்லை என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களுக்கும் போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குதல் மற்றும் சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்துவதனூடாக அந்த மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment