முடியுமாயின் சாகும் வரையில் ஆட்சியில் இருக்கவே முயற்சிக்கின்றனர்!
அரசியல்வாதிகளில் மதிக்கத்தக்க நபர்களும், பெண்களும் 10 வீதமானோரே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பெரும்பாலானோர் தமது கொள்கைகளை விற்று, அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாடு ஆகியவற்றை நாட்டில் முன்னெடுத்துச் செல்வதற்காக பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டும் செயல்திட்டமொன்று காலி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே சந்திரிக்கா அம்மையார் இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அவர்,
''அதிகாரத்திற்கு வந்து களவாடுகின்றனர். தொடர்ந்து களவெடுத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில் இருக்க முடியுமாயின் அதனையும் செய்வார்கள். மனிதாபிமானம் என்பது இதுவல்ல. உயர்ந்த மனித பண்புகளுடன் வாழுமாறு அனைத்து மதத் தலைவர்களும் கூறுகின்றனர். நாம் அனைவரும் ஒரே இனத்தில் சேர வேண்டும். அது மனித இனமாகும். நாம் அனைவரும் ஒரே மதத்தில் சேர வேண்டும். அது மனிதாபிமான மதம்'' என்று சந்திரிக்கா அம்மையார் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment