தமிழர்கள்: தென் பகுதி நிலமைகளுக்குள் உட்புகுதல் வேண்டும். கோமின் தயாசிறி
தமிழர்கள் வடக்கைவிட அதிகம் தென்பகுதி அரசியலைத்தான் அவதானிக்க வேண்டும்.
பயங்கரவாதம் ஒரு தனிநாடு தேவை என்கிற உணர்வை ஏற்படுத்தும் பாதையைsouthern வடபகுதி தமிழர்கள் மத்தியில் விட்டுச் சென்றுள்ளது, எல்.ரீ.ரீ.ஈ யினால் மூளைச்சலவை செய்யப்பட்ட அந்த உணர்வு புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பிவரும் பணத்தின் மூலம் உயிரோடு வைக்கப் பட்டுள்ளது. மாகாணசபை நிலைப்பாட்டின்படி வடக்கில் பிறந்திருப்பது, காலாவதியான இந்திய மருந்து அதற்கான பதில் இல்லை என்று தேடிப்பார்க்கும் முயற்சி. வடக்கு விரும்பும் தற்போதைய தேவை உள்நாட்டு தயாரிப்பான ஒரு மாற்றீட்டு யோசனை முன்வைக்கப் படுவதை: அதாவது கொழும்பில் தயரிக்கப்பட்டு மற்றும் யாழ்ப்பாணத்தில் சுவை சேர்க்கப்பட்டு விற்பனை செய்யவேண்டிய பதார்த்தமாக இருக்க வேண்டும்.
உள்நாட்டில் வளர்ந்த பயங்கரவாதத்தை இராணுவம் வெற்றி கொண்டதின் பின்னர் தமிழரின் பெருமை காயமடைந்து விட்டது. பாதிக்கப்பட்ட தெற்கு இயல்பாகவே அதில் மகிழ்வடைந்தது. சிறைப்பிடிக்கப் பட்டவர்களின் கரங்களில் அகப்பட்ட வடக்கு அவமானத்தால் கூனிக் குறுகியது என்றாலும் தோல்வியடைந்து சிறைப் பிடிக்கப் பட்டவர்களுக்கு அளவுக்கு மீறி ஆதரவு வெளியிட்டு அதை பெரிதுபடுத்தியது. பயங்கரவாத்திலும் மேலாக ஜனநாயகம் வழங்கும் நலன்களை உணர்ந்து கொண்டது. ஆனால் பின்தங்கிய நிலை காரணமாக அதைப் புரிந்து கொள்ள அதிக காலம் பிடித்தது. கடந்த காலங்களை பின்னோக்கிப் பார்த்தால், பயங்கரவாதத்தை பாராட்டுவது அவர்களின் வாழ்க்கை வழிக்கு ஒத்ததாக இல்லை. தென்பகுதியினரின் லௌகீக வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது வடபகுதியினர் வாழ்க்கை மிகவும் பழமையானது. தெற்கு அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். வெற்றியாளர்களான தென்பகுதியினர் வடக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் நியாயமான மனக்குறைகளை தீர்த்து வைப்பதில் பரந்த மனதுடன் செயல்பட வேண்டும்.
அரசியலமைப்பு மாற்றங்கள் சமூகங்களை இணைக்கப் போவதில்லை ஆனால் இனவாத அரசியலை தூண்டிவிடுவதன் மூலம் தங்கள் பணிகளை புதுப்பித்துக் கொள்ளுவதற்கு தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. எந்த ஆறுதலையும் தராத ஒரு அரசியலமைப்பு பிறப்பதற்கு சாத்தியமில்லை. உள்ளுராட்சி தேர்தல்களுக்குப் பின்னர் தமிழர்கள், பிரதான பகுதி அரசியலுடன் இணைந்து ஒருமித்து வேலை செய்து பரஸ்பர நன்மைகளை பெறுவதை கவனத்தில் கொள்ளவேண்டும். நல்லிணக்க செயற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) மத்திய அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சரவையில் கௌரவமான இடங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும், இங்கு குறிப்பிட வேண்டியது, மத்திய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது, மற்றும் அது உயிர்வாழ்வதற்கு ரி.என்.ஏ யினை நம்பியிருக்க வேண்டியதில்லை.
தோற்றுப்போன அரசாங்கம் ஒன்றை தூக்கி நிறுத்த தாமதமாக முன்வருவது, சிங்களவர்களின் மனதில் சந்தேகங்களை உருவாக்கி எதிர்மறையான விளைவுகளைத் தரும். இனி ஒருபோதும் மீண்டும் ஒரு “ஐதேக - ஸ்ரீலசுக” இணைந்த ஆட்சி உருவாக முடியாது. மையத்தின் மதிப்பை பாராட்ட வேண்டுமானால் அதை சுவைத்துப் பார்க்கவேண்டும் மற்றும் சுவை பார்ப்பதற்கு இயலக்கூடியதாகவும் இருக்க வேண்டும். தலைவர் சம்பந்தனின் வாழ்நாளின்போதே எந்த ஒரு இணைப்பும் எளிதானதாக இருக்கும், இங்கு சுமந்திரன் ஒரு பொறியியல் பாத்திரத்தை வகிக்க முடியும். ரி.என்.ஏ யானது ஐதேக அல்லது ஸ்ரீலசுக அல்லது இரண்டுடனும் சேர்ந்து ஒரு கூட்டு அரசாங்கத்தில் வாழும்போதுதான் ஒன்றிணைப்பு என்கிற கருத்து அர்த்தமுள்ளதாக மாறும். ஸ்ரீலங்காவாசி என்கிற அடையாளத்தை முன்னேற்றுவது அவசியம், வித்தியாசமான கலாச்சாரத்தைக் கொண்ட வெவ்வேறு தரப்பினர் ஒரே குடும்பமாக வாழும்போது அதற்கு பாதுகாப்பு தேவைப்படும். யுத்தம் ஒரு கடந்தகால நிகழ்வு என்கிற கருத்தை நிச்சயம் ஏற்படுத்த வேண்டும். இணைப்பு என்பதன் கருத்து ஐதேக - ஸ்ரீலசுக வில் உள்ள பெரும்பான்மை சிங்களவர்கள் ரி.என்.ஏ யில் உள்ள சிறுபான்மை தமிழர்களுடன் ஒன்றிணைவது – கணிசமான அளவு வாக்காளர்கள்.
அது ரி.என்.ஏ பிரிவினைவாதத்தை தூக்கியெறிந்துவிட்டு மத்தியுடன் அதிகாரத்தை பகிர்வதற்கு தயாராக உள்ளது என்பதை வெளிப்படுத்தும். ரி.என்.ஏ மத்தியில் தோற்றுவிக்கப்படும் நன்மைகளைப் பிரித்தெடுத்து தங்கள் வசமுள்ள அதிகாரத்தின் மூலம் அவர்களின் மக்களுக்கு அந்த நலன்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். சமூகங்களக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது நல்லிணக்கத்தின் ஒரு முன்னுரையாகும். ஐதேக மற்றும் சிறிசேன பிரிவிலுள்ள சிங்கள மக்களின் நம்பிக்கையை ரி.என்.ஏ பெறவேண்டும். ஒற்றையாட்சி அரசியலமைப்பில் உள்ள அதிகாரப் பகிர்வின் கீழ் ரி.என்.ஏ அமைச்சர்கள், அவர்களின் மக்களின் நியாயமான மனக்குறைகளை நிவர்த்தி செய்ய முன்வரலாம். யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் புதிய சிந்தனைகள் தோன்றியிருக்கலாம் மற்றும் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பின் கீழ் ரி.என்.ஏ திறமையாக செயலாற்ற இயலக்கூடிய ஒரு சூழ்நிலையை தோற்றுவித்ததுக்கான பாராட்டு மகிந்த ராஜபக்ஸவுக்கே வழங்கப்பட வேண்டும். புலிகள் செயற்பாட்டில் இருக்குமானால் ரி.என்.ஏ உயிர்வாழ்வதற்காக அவர்கள் தாளத்திற்கு ஏற்ப நாட்டியமாட வேண்டி இருந்திருக்கும் இல்லையா? எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்திருந்தால் பலவகையான பலவீனங்களை காண்பிக்கும் தெரிவு செய்யப்பட்ட விக்னேஸ்வரனின் தலைமையின் கீழான ஒரு மாகாணசபை தோன்றியிருக்குமா?
மிதவாத அரசியலின் எல்லைகளுக்கு அப்பால் இருப்பதை தீவிரவாதிகள் தேர்வு செய்யும்போது தமிழ் அரசியல்வாதிகளிடத்தில் வேற்றுமைகள் எழக்கூடும். தமிழ் அரசியல்வாதிகளைக் காட்டிலும் தமிழ் மக்களுக்கு நன்மைகள் பாயவேண்டும் என ரி.என்.ஏ உறுதி மேற்கொள்ள வேண்டும். வீணான மாகாணசபை முறை மூலமாக எல்.ரீ.ரீ.ஈயினை ஜனநாயக மடிப்புக்குள் ஈர்ப்பதற்காக இந்தியாவின் தவறான சிந்தனையினால் 13வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, இதில் வாக்காளர்கள் காரணமாக தெரிவு செய்யப்பட்டவர்கள் நன்மைகளில் பெரும் பகுதியினை பிரித்தெடுக்கிறார்கள். வடக்கு அரசியல்வாதிகள் உண்மையில் ஒரு தீடீர் பயணத்துக்குள் இறங்குவதற்கு முன்னால் தென்பகுதி அரசியலை உற்றுக் கவனிக்க வேண்டும்.
ஐதேக ஒரு சௌகரியமான வலயம் என ஜனாதிபதி சிறிசேன கண்டுகொண்டால், அவருக்கு வெகு தூரம் பயணிக்க வேண்டிய தேவை இல்லை. அவரை இன்றைய நிலைக்கு அவர்கள்தான் கொண்டு வந்தார்கள். மக்களுக்காக ஒரு மனிதன் என்கிற உண்மையை ஐதேக வின் உயர்மட்டம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது. ரணில் விக்கிரமசிங்காவின் நடவடிக்கைகளினால், ஐதேகவுக்கு சிறிசேன வரவேற்கத் தக்க ஒரு சொத்தாக மாறியுள்ளார்..
சிறிசேன ராஜபக்ஸ பிரிவினருடன் இணையப் போகிறாரா? உள்ளுராட்சி தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன் அது சாத்தியமில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் புதிய கட்சிக்கு தாவுவதை அவர் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க நேரி;டும். அதன் முடிவுகளுக்காக காத்திருப்பது அவர் கடக்கும்போது விரிக்கப்படும் சிவப்புக் கம்பள வரவேற்பை இழக்கவேண்டி இருக்கும் என்று அர்த்தமாகும். அவர் தனது மரியாதையை பாதுகாத்துக் கொண்டு பச்சை மூலையிலேயே இருக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தல்களில் ஒரு மும்முனை போட்டிக்கு வாய்ப்பு இருந்தால் சிறிசேன மிகவும் மோசமான முறையில் மூன்றாவதாகத்தான் வருவார். புதிய வாக்களிப்பு முறையின் மூலம் ஐதேக, சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரியமான மகன்களை தானே தத்தெடுத்துக் கொள்ளும். வாக்கு எண்ணிக்கையில் ஐதேக சிறிசேனவின் வேட்பாளர்களை மழுங்கடிக்கும். புதிய கட்சி ஐதேகவுக்கு ஒரு கடுமையான போட்டியை கொடுக்கலாம் ஆனால் சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தோற்கடித்துவிடும், அப்போது தேர்தல் முடிவுகளின் பின்னர் வெளியேறும் கதவுகள் விரியத் திறக்கும்.
ஜனாதிபதியால் ஒரு அரசாங்கத்தை உருவாக்கவோ அல்லது உடைக்கவோ முடியும்.
சிறிசேன தனது சொந்த மனிதன் என்கிற அந்தஸ்தில்தான் வளர்ந்துள்ளார். அவர் ஒரு சொத்து ஆனால் பாராளுமன்றத்தில் உள்ள அவரது வெறுப்பான மனிதர்களின் வரவால் மங்கலான தோற்றத்தை கொண்டிருக்கிறார். அவரால் தனியாக எதையும் செய்ய முடியாது. அவருக்கு சாய்ந்து கொள்ள ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகிறது. ஒரு ஜனாதிபதி என்கிற வகையில் தான் ஆதரவு தெரிவிக்கும் பகுதிக்கு உதவியாக அவரால் திறமையாக செயல்பட முடியும், அவரது வேட்பாளர்கள் பயனற்றவர்களாக இருப்பதினால் அது மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. தற்போது சிறிசேனவின் வேட்பாளர்கள் புதிய எண்ணங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளக் கூடியவர்களாக உள்ளார்கள் இதன் அர்த்தம் ஐதேக தேவையற்றவர்களை தத்தெடுத்துள்ளது, எந்தப் பட்டியலிலும் அவர்களுக்கு ஒரு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியால் பொதுவாக உள்ளுராட்சி தேர்தல்களில் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியும்.
ஒரு புதிய அரசியலமைப்பை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக ஐதேக பெரிய அளவில் வெற்றிபெற வேண்டும். இல்லையெனில் கூட்டணி ஒரு மெதுவான மரணத்துக்கு தள்ளப்படும் மற்றும் அரசாங்கங்களை மண்டியிடச் செய்யும் முட்டாள்தனமான 19வது திருத்தம் காரணமாக மீதமுள்ள மூன்று வருடங்களுக்கும் பலவீனமான ஒரு பாராளுமன்றத்தின் ஆட்சி ஆரம்பிக்கும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெற்றியாளர்களை தெரிவு செய்வதில் மகிந்த ராஜபக்ஸவைபோல ஐதேகவால் தேர்ந்தெடுக்க முடியாது, புதிய கட்சியில் வாக்கு பிடிப்பவர்களுக்கு குறைவு ஏற்படும் சாத்தியம் உள்ளது. சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையில் பெரும் பகுதியை இழக்க நேரிடும்.
விளம்பரம் தேடுவதற்காக சிறிசேனவின் முகாமிலிருந்து தேவையற்றவர்களை தன்பக்கம் இழுத்து மகிந்த தனது பட்டியலை விரிவு படுத்தமாட்டார், அது நிச்சயமில்லாத மிதக்கும் வாக்காளர்களை அருவருப்பூட்டி தேர்தல் நாளன்று அவர்களை வீட்டிலேயே இருக்கச் செய்துவிடும். பழைய முகங்கள் பலவற்றை ஈடு செய்வதற்கு மகிந்த அணியினருக்கு பல புதிய முகங்கள் தேவைப்படுகிறது, அவர்கள் பதவிக் கவர்ச்சி மற்றும் சலுகைகள் காரணமாக மரணம் வரை பிரிய மாட்டார்கள். சந்தேகமான சக்திகள்;, விருந்தோம்பல் உறைவிடங்கள் வழங்குபவர்கள் தேசியப் பட்டியலில் இடம்பெறுவார்கள். அதிகாரப் படிநிலையான கூட்டங்களில் வழங்கப்படும் உணவு மற்றும் பான வகைகளின் தரம் காரணமாக அவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.
சிறிசேனவின் நம்பகமான தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தடுமாற்றத்தில் அவரைக் கைவிட்டு ஸ்ரீலசுக வாக்குகளை திரும்ப பெறுவதற்காக எதிரணிக்கு தாவலாம் - இறுதியாக கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் உள்ளுராட்சி சபையில் ஒரு இடத்தை தக்கவைக்க உதவலாம். ஐதேக அணியில் உள்ள அடிமட்டத் தொண்டர்கள் தங்களுடன் தொடர்பில்லாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள். மிதக்கும் வாக்காளர் ஒரு சிந்தனைவாதி பதவி ஆசைக்காக பக்கத்துக்கு பக்கம் தாவும் வேட்பாளருக்கு வாக்களிக்க நிச்சயம் வாக்குச்சாவடிக்கு நடக்கமாட்டார். மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து திரண்டு வரும் வெண்ணையை பெறுவதற்கான காலம் கனியும் மட்டும் காத்திருப்பார், அதேவேளை சிறிசேன அவர்களுக்கு பலவகை சலுகைகளையும் வழங்கி அவர்களை பிடித்து வைப்பதற்காக கடும் முயற்சி செய்வார்.
அரசியலமைப்பு தயாரிப்பது வசதியான ஒரு சாக்கு, நாடு பிளவு படுவதை பாதுகாத்தோம் என்று கூறி அரசியலமைப்புக்கு குழிபறித்து கம்பீரமான போர் வீரர்களாக வெளியேறி எதிர்கட்சி வாக்காளர்களை வசமாக்கி ஹீரோக்களாக மாறலாம். சிறிசேன கொண்டு நடப்பது தோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களின் ஒரு கூட்டத்தை, அவர்கள் மகிந்த ராஜபக்ஸவின் ஆதிக்கம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கையால் நியமன பாராளுமன்ற உறுப்பினர்களாகி ஐதேக தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ளார்கள். குறையும் ஸ்ரீலசுக வாக்குகளை ஈடு செய்வதற்கு எத்தனை ஐதேக வாக்குகளை அவர்களால் பெறமுடியும்?
அடுத்த பாராளுமன்றத் தேர்தல் தினத்துடன் பாராளுமன்றத்திற்கு 75 வருடங்கள் பூர்த்தியாகிறது, முகப்புத்தகம் வாயிலாக மகிந்த ராஜபக்ஸ புதிய முகங்களுக்கு விண்ணப்பம் செய்வாரா? மாறாக இரண்டு தடவைகள் தோற்றதினால் அப்படி இல்லையா. எல்லா பதவிகளையும் வகித்த மரியாதைக்குரிய ஒரு மூத்த ஆட்சியாளர் என்கிற வகையில் தலைமை பொறுப்பை ஒரு புது முகத்திடம் கையளித்தால் அது மரியாதைக்குரிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு போதுமானளவு மகிமையை பெற்றுத் தரும் - தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி, கூர்ந்த அரசியல் அனுபவங்கள் மூலம் தங்கள் எல்லைகளை தெரிந்து கொள்ள வேண்டும்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதன் முன்னோர்களால் தூண்டப்பட்ட நிரந்தர தாழ்வு மனப்பான்மையால் பாதிப்படைந்துள்ளது, அதை வழிநடத்த பண்டாரநாயக்கா அல்லது ஒரு ராஜபக்ஸ அவசியம் - அதைத்தவிர ஏனையவர்கள் சாதாரண குடிமகன்களே என்று கூறப்படும் இந்த கோட்பாட்டை ஏற்றுக் கொள்வது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறுபிள்ளைகளுக்கு கழிப்பறையை பயன்படுத்த பயிற்சி அளிப்பதுபோல உள்ளது மற்றும் இந்த போலி வழிபாட்டு மரபினை பொய் என சிறிசேன நிரூபித்துள்ளார். இந்த பிரபல குடும்பங்களுக்குள் மற்றவர்கள் அதை ஏற்பதை தடுக்க மோசமான சண்டை சச்சரவுகள் தோன்றியுள்ளன.
தலைமை தாங்குவதற்கு கச்சிதமாகப் பொருந்துபவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே வளர்ந்த கோத்தபாய ராஜபக்ஸதான், தனி ஒருவனாக தன்னிடம் ஒப்படைக்கப் பட்டதை சிறப்பாகச் செய்தவர், பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததுடன், அலட்சியப் படுத்தப் பட்டதால் விரைவாகவே மங்குவதாகத் தோன்றிய கொழும்புக்கு புதிய வர்ணத்தை பூசிப் பொலிவை உண்டாக்கியவர். யுத்த வர்ணத்தால் அலங்கரிக்கப்பட்ட புதிய முகம், முதல் தடவையாக போட்டியிடுபவர் வெற்றி பெறும் சமிக்ஞையை காண்பிப்பவர். ராஜபக்ஸவின் பெயரை சுமப்பதற்கு மற்றவர்களைவிடத் தகுதியானவர்.
இராணுவ பொருத்தங்களை கொண்டிருப்பது சிங்களவர்களை மற்றும் அதன் இளைஞர்களை வெகுவாக கவரக்கூடியது. இருந்தபோதும் சிறுபான்மையினரை திரும்ப முடியாத விளிம்புக்கு விரட்டிவிட முடியும். மிதக்கும் வாக்குகள் மொத்தத்தையும் அவர் பெறுவார், ஆனால் சிறபான்மையினரைப் போலவே ஐதேக வின் தேசப்பற்றுள்ள சிங்கள பெரும்பான்மையினர் வாக்களிக்கும் பாணியிலும் அது தங்கியுள்ளது. தந்திரமான வாக்களிப்பினால் அவர்கள் கோத்தாவை அகற்ற முடியும்.
உள்ளுர் அரசியல் நுணுக்கங்களை கோத்தா சாதாரண மனிதனிடம் இருந்து கற்றுக்கொள்வது அவசியம் இல்லையெனில் அவர் மற்றொரு பொன்சேகாவாக மாறிவிடுவார். அவரத மூத்த சகாக்களிடம் பொறாமையும் பதுங்கியுள்ளது. அரசியலுக்கு அவர் அனுபவமில்லாத புதியவர் என்பதால் அவரது வெற்றி அவர் தெரிவு செய்யும் ஆலோசகர்களிடமே தங்கியுள்ளது.
தமிழர்கள் வடக்கைவிட அதிகம் தென்பகுதி அரசியலைத்தான் அவதானிக்க வேண்டும்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
0 comments :
Post a Comment