இத்தாலி தூதரகத்தில் 18 மில்லியனுக்கு ஆட்டையை போட்டவர் யார்?
கடந்த கால ஆட்சியில் இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் தகவல்களைப் பெற்றுள்ளனர். தூதரக அலுவலகத்திற்கு சொந்தமான 18 மில்லியன் (18,400,000) ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை அவிழ்த்திவிட்டுள்ளனர். அதன்படி தூதரக நிதிப் பிரிவு பொருப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
தூதுவரின் ஆலோசனைபடி குறித்த பணத்தை சில கணக்குகளுக்கு வைப்பிலிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த மோசடியின் பின்னணியில் தூதுவரும் உயர் மட்ட தரப்பினரும் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் குறித்து தகவல்கள் வௌியாகி கைது செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச பணத்தை தனிநபர், அமைப்பின் கணக்கில் வைப்பிலிடுவது குறித்து அதிகாரிகள் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட உத்தரவில் அவர்கள் இவ்வாறு கணக்கில் பணம் வைப்பிலிட்டுள்ளனர். அந்த அரசியல்வாதிகள் மற்றும் உயர்பீடத்தில் உள்ளவர்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றார்கள். அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
0 comments :
Post a Comment