'பிரா அமைப்பிற்கு' நான் ஆசிர்வாதம் வழங்கினேன் - ராஜித கூறுகிறார்
88-89ம் ஆண்டு பயங்கரமான காலத்தில் செயற்பட்ட மனித படுகொலை துணை இராணுவக்குழுவான 'பிரா அமைப்பிற்கு' தான் ஆசிர்வாதம் வழங்கியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நேற்று ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற சலகுன நிகழ்ச்சியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு பயங்கரவாதத்தினாலேயே பதில் வழங்க வேண்டும் என கூறியுள்ள அவர், பிரா அமைப்பிற்கு எவ்வாறு ஆசிர்வாதம் வழங்கினீர்கள் என்ற கேள்விக்கு பதில் வழங்காமல் தொடர்ந்து நழுவிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
பிரா அமைப்பிற்கு தலைமை வகித்தீர்களா என்ற கேள்விக்கு 'இலலை' என்று தில் வழங்கியதுடன், அந்த அமைப்பிற்கு பட்டியல் வழங்கினீர்களா என்ற கேள்வியிலும் நழுவல் போக்கை அமைச்சர் பேணினார்.
அந்தக் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மாத்தளை மாவட்ட இராணுவ அதிகாரியாக இருந்ததுள்ளதுடன், அந்தப் பிரதேசத்திலேயே அதிகமான இளைஞர்களின் உயிரிழப்புக்கள் பதிவாகிய இருந்தததாகவும், எவ்வாறாயினும் அது தவறல்ல என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் கூறியுள்ளார்.
பிரா அமைப்பின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தீர்களா என்பதற்கு, அந்தக் காலத்தில் தான் களுத்துறையில் வசிக்கவில்லை என்று அமைச்சர் அதனை நிராகரித்தார்.
எவ்வாறாயினும் 88-89 பயங்கர காலத்தில் இளம் போராட்டக்காரர்கள் ஒவ்வொருவரினது தலைக்கு 50,000 ரூபா பெற்றுக் கொண்ட வைத்தியர் யார் என்ற கேள்வியை நிகழ்ச்சியை நடத்திய எந்த அறிவிப்பாளர்களும் அமைச்சரிடம் கேட்கவில்லை.பிரா அமைப்பின் வைத்தியர் ஒருவர் அன்றைய அரசிடம் 50,000 ரூபாய் பெற்றுக் கொண்டதாக, பிந்திய காலத்தில் சிலுமின பத்திரிகை பிரதான தலைப்பு செய்தியாக வௌியிட்டிருந்தது.
0 comments :
Post a Comment