Friday, November 20, 2015

பாரிஸில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பயங்கரவாதிகள்.

இஸ்லாமிய பயங்கரவாதிகளால் அண்மையில் பாரிஸில் கோழைத்தனமாக கொலைசெய்யப்பட்ட 129 பேருக்கும் அங்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில் இவர்களுக்கு புலிப்பயங்கரவாதிகளும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஐரோப்பாவில் பயங்கரவாதிகளாக தடை செய்யப்பட்டுள்ள புலிக்கொடியுடன் சென்று இறந்தவர்களை அவமதித்துள்ளமை பலரையும் ஆத்திரத்திலாழ்தியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் புலிப் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை பேணுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டில் பிராண்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் காரியாலம் பிராண்ஸ் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு அவ்வமைப்பின் தலைவரை கைது செய்து சிறையிலடைத்திருந்தனர். இந்நிலையில் இவ்வமைப்பினர் புலிக்கொடியினை சுமந்து சென்று இறந்தவர்களுக்கு அஞ்சலி என்ற பெயரில் அவமதித்துள்ளனர்.

இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவியவர்கள் என்ற அடிப்படையில் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளலாம் என தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவரும் இவர்கள் தங்களை மனிதநேயர்களாக காண்பித்துக்கொள்வதற்காக இவ்வாறு பாசாங்கு செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com