பாரிஸில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஆயுதம் தாங்கிய அரசியல் போர்! சிறிதரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அண்மையில் கனடாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசுகையில் „அரசியல் என்பது ஒர் ஆயுதம் தாங்கிய போர். போர் என்பது ஆயுதம் தாங்கிய அரசியல்.' என பயங்கரவாதத்திற்கு புதியதோர் அர்த்தம் கற்பித்திருந்தார்.
அவ்வாறாயின் கடந்த 13.11.2015 அன்று பாரிஸில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தாக்குதல் 'ஆயுதம் தரித்த அரசியல் போரா?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மேலும் இலங்கையில் புலிப்பயங்கரவாதிகள் மேற்கொண்ட பயங்கரவாத செயற்பாடுகளை நியாயப்படுத்திய சிறிதரன் 'நாங்கள் எங்களை தாக்குகின்றபோது, பாதுகாப்புக்காக எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தோம்' என்றும் கூறியிருந்தார்.
புலிப்பயங்கரவாதம் இலங்கையில் மண்கவ்வியதன் பின்னர் மண்டையன் குழுவின் பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட சிறிதரன் „நாங்கள்' என்பதன் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பயங்கரவாதிகள் என்று கூறுகின்றாரா? அன்றில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் சிறிதரன் வன்னிச் சிறார்களை பயங்கரவாதிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கின்றாரா?
0 comments :
Post a Comment