தற்போது நீதியரசர்கள் தீர்ப்பு பற்றி கலந்துரையாட அலரி மாளிகைக்கு செல்வதில்லை!
நல்லாட்சி அரசாங்கத்தில் நீதிமன்றத் தீர்ப்புகள் சவால்களுக்கு உட்படுத்தப்படுவதில்லை எனவும், தாம் வழங்கும் தீர்ப்புத் தொடர்பில் கலந்துரையாட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அலரி மாளிகைக்குச் செல்வதில்லை எனவும் அமைச்சர் சஜீத் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
நாம் நீதிபதிகளுக்கு கல் வீசுவதோ, சேறு பூசுவதோ இல்லை எனக் கூறிய அவர், 19வது திருத்தச் சட்டம் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
தங்காலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தற்போது எந்தவொரு வழக்குத் தொடர்பிலும் நீதிபதிகளுக்கு நாட்டை பற்றி சிந்தித்து, சுயாதீனமான முடிவை எடுக்க முடியும் எனவும் சஜித் பிரேமதாஸ இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த அரசாங்கத்தைப் போல நீதிமன்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment