Sunday, March 1, 2015

புலிகளின் தலைமையே தமது உறுப்பினர்களை நடுத்தெருவில்விட்டது! ஏனைய கட்சிகள் கட்டுக்கோப்புடன் உள்ளது. சுவிசில் வித்தியாதரன்.

„என்னுடைய விபச்சாரம் இல்லை இல்லை என்னுடைய எழுத்தூ ஆயுதம்' எனும் புத்தகத்தை கொழும்பில் ரணில் விக்கிரமசிங்காவின் கால்களுக்கு சமர்பணம் செய்து வெளியிட்டுவிட்டு அதை புலம்பெயர்ந்த மக்களிடம் காசாக்க வந்திருந்த வித்தியாதரனிடம் , சூரிச்சில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் சுவிஸ் கிளை செயற்பாட்டாளரும் , சமூகம் சார்ந்த செயற்பாட்டாளருமான சுதாகரன் என்பவர் „தாங்கள் ஆரம்பிக்க இருக்கின்ற அரசியலியக்கம் முன்னாள் புலிகளியக்க உறுப்பினர்களுக்கு மாத்திரமானதா அன்றில் ஏனைய இயக்க உறுப்பினர்களையும் இணைத்து கொள்வீர்களா? என்று கேட்டுள்ளார்.

இக்கேள்விக்கு பதிலளித்த வித்தியாதரன் ஏனைய ஆயுதக்குழுக்கள் இலங்கையில் அரசியல் கட்சிகளாக செயற்படுவதாகவும், அவர்களின் தலைமைகள் கட்டமைப்புடன் உள்ளதாகவும் புலிகளின் தலைமையையே அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் உறுப்பினர்கள் அரசியல் தலைமைத்துவமற்ற நிலையில் உள்ளதாகவும் நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.

அதாவது பிரபாகரன் பேசிய தமிழை பாலசிங்கம் மொழிபெயர்ப்பு செய்வதுபோல் சொல்வதாயின், சகல இயக்க தலைமைகளும் தங்களுடைய தலைமை குணங்குறிகளுடன் தமது தொண்டர்களை கொள்கை வழி தவறாது நேரிய பாதையில் கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதாகவும் , புலிகளின் தலைமை மாத்திரமே அதன் உறுப்பினர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு சென்றுள்ளார்கள் என்றும் மூ(ஓ)த்த ஊடகவியலாளர் வித்தியாதரன் கூறுகின்றார் என்று சொல்லலாம் அல்லவா.

„என்னுடைய எழுத்தாயுதம்' என தன்னுடைய புழுகை அவிட்டு விட்டிருக்கின்றார் வித்தியாதரன். வித்தியாதரனுடைய ஆயுதம் தொடர்பாக கேட்பதற்குரிய இரண்டே இரண்டு கேள்விகள், உங்களுடைய ஆயுதத்தினூடாக எதை சாதித்தீர்கள்? உங்களுடைய ஆயுதத்தால் மக்களுக்கு கிடைத்த நன்மை ஏது? நீங்கள் செய்து கொண்ட குற்ற ஓப்புதல் வாக்குமூலத்தில் „என்னுடைய எழுத்துக்களை வாசித்துத்தான் வடகிழக்கு பொடிகள் இயக்கத்துக்கு போனவர்கள்' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுடைய எழுத்தை வாசித்து போனவர்கள் வென்றார்களா? இல்லை தோற்றார்களே, ஆகவே „என்னுடைய தோற்ற ஆயுதம்" என்று மறு பதிப்புக்களுக்கு பெயரிட முடியுமா? முடியாதுதான்போகும் காரணம் அடித்த புத்தகங்களை கூட்டம் கூட்டிக் கூட்டி தனவந்தர்களின் கைகளில் கொடுத்து அவர்கள் பொக்கட்டுக்குள் செருகும் ஆயிரங்களுடன் லட்சங்கள் சேரலாம். ஆனால் எஞ்சிய புத்தகங்களை கடலைக்கடைளும் எடுக்காது காரணம் அதில் அழுக்குகள் படங்களாக உள்ளன.

மேலும் உங்களுடைய எழுத்தாயுதத்தால் புலிகளில் இணைந்த பொடிகள் பின்னர் பாசிசக் கொள்கைகொண்டு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்தபோது, தமிழ் இளைஞர்களை தெருவில் டயர்போட்டு எரித்தபோது, அவர்களின் எழுத்துரிமை, வாசிப்பு உரிமை, விரும்பிய தொலைக்காட்சியை பார்க்கும், வானொலியை கேட்கும் உரிமையை பறித்தபோது, பச்சிளம் பாலகர்களை பலவந்தமாக படையில் இணைத்தபோது, கற்பிணிகளை தற்கொலைதாரிகளாக மாற்றியபோது உங்களது எழுத்தாயுதம் கொழும்பிலுள்ள விபச்சாரிகளின் சாமனுக்குள்ளே இருந்தாக பேசுகின்றார்களே.

மேலும் நீர் உன்னை துணிச்சலான ஊடகவியலாளன் என்று வேறு பிதட்டுகின்றீரே! உன்னிடம் நான் ஒரு கேள்வியை தொடுக்கின்றேன். உனது எழுத்தினூடாக புலிகளமைப்பில் இணைந்து கொலைஞர்களாக மாறி மனித உரிமைகளை மீறியவர்களை நோக்கி அம்மனித உரிமை மீறல்களை நிறுத்துமாறு என்றாவது எழுதியுள்ளீரா அன்றில் குற்றத்தை தூண்டிய நீர் அந்த குற்றத்திற்கு மன்னிப்புக்கோரியுள்ளீரா?

காலத்துக்கு காலம் அரியணை ஏறுகின்றவர்கட்கும் பலமிக்கவர்களாக நிற்கின்ற முதலாளிவர்க்தத்திற்கும் குசாதுக்கி திரியும் தாங்கள் புரிவது ஊடகவியல் அல்ல அதற்கு பெயர் அழுக்கெடுப்பு. சற்று பாமரனுக்கும் விளங்கக்கூடிய பாஷையில் கூறுவதாயின் சலவைதொழில்.

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்யும்போது தாங்கள் ரிஎன்ஏ யிடம் ரிக்கட் கேட்டு நின்றீர்கள். உதயனை வைத்து உனக்கு ரிக்கட்டா , போ வெளியே என தங்களை தங்கள் மைத்துனன் வெளியே தள்ளி அந்த ரிக்கட்டை பெற்றுக்கொண்டார். அப்போது நான் சுயேட்சையாக போட்டியிட்டு வாக்குளை உடைப்பேன் என்று ரிஎன்ஏ யை மிரட்டியபோது, கொஞ்சம் பொறப்பா „மச்சான் மத்தியில் மாகாணத்தில் நீதான்' என்று சம்மந்தர் விட்ட விடுகையில் வட மாகாண முதலமைச்சர் கனவில் சஞ்சரித்தது மாத்திரமல்ல , எதிர்வரும் வட மாகாண சபைத்தேர்தலில் நானே முதலமைச்சர் வேட்பாளர் வந்தவுடன் பாருங்களேன் விளையாட்டை என்று மாறிய முடிச்சுக்கதைகளை நான் இப்ப அவிழ்க்கவிரும்பவில்லை. ஒரே ஒரு படத்தை மாத்திரம் இங்கு வெளியிடுகின்றேன். நோர்வேயில் உண்டியலை நிரப்பிக்கொண்டு சொச்சத்தை பரிஸ் சூரிச்சிலும் நிரப்ப உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அங்கு வரவுள்ள மந்தைகளுக்காவது இந்தப்படத்தின் உண்மைக்கதையை சொல்லுங்கள். சொல்லாவிட்டாலும் நான் சந்தர்ப்பம் வரும்போது யார்யார்? எங்கே? எப்போது? என்னநோக்கத்துடன் ? என்ன விடயம் பேசப்பட்டது? என்பவற்றை தெளிவாக எழுதுவேன்.



இதைப்பார்த்தவுடன் அனாமதேய இணையங்களை நடாத்துபவர்கள் வெளியே வரவேண்டும் என்று நான் சூரிச்சில் வைத்து ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன் என்று மீண்டுமொருமுறை கூறலாம். அதற்கான பதிலையும் இப்போதே கூறுகின்றேன். நான் அனாமதேயமாக இருந்து யாருக்கும் கூசா துக்காமல் தவறை தவறு என்று சொல்வதையே சிறந்த சேவையாக கருதுகின்றேன். மாறாக மூ(ஒ)த்த ஊடகவியலாளர் என்று வெளியே வந்து பின்னர் ஏதாவது கட்சியை மிரட்டி சீட்டு கேட்டு பாராளுமன்று போகும் நோக்கமோ முடிச்சு மாறும் நோக்கமோ அல்லது யாருடய வியாபாரத்தில் பங்காளியாகும் நோக்கமோ கிடையாது.

முன்னாள் புலிகளுக்காக கட்சி ஆரம்பிக்கப்போகின்றேன் என்று கூறியபோது எத்தனை முன்னாள் புலிகள் உங்கள் கட்சியில் இணைய இருக்கின்றார்கள் என்ற கேள்வி ஒரு அரங்கில் கேட்கப்பட்டது . யாழ்பாணத்தில் ஒருவரும் இல்லை சிலவேளை வெளிநாடுகளுக்கு தப்பி ஒடியிருக்கின்ற முன்னாள் புலிகள் இணையலாம் என்று எதிர்வுகூறப்பட்டது. ஆனால் தங்கள் சுவிஸ் ஒஸ்லோவில் நிகழ்வுகளில் கலந்திருந்தோரில் ஐரோப்பாவிலே பதவி தேடி அலைந்து திரிகின்ற பச்சோந்தி பசங்கள் பத்துபேரைத்தவிர ஒரு முன்னாள் புலி உறுப்பினர் கூட வந்திருந்தாக அறியக்கிடைக்கவில்லை.

எனவே நான் உங்களுக்கு இறுதியாக விடுக்கும் சாவல் யாதெனில் யாழ்பாணத்தில் 12000 முன்னாள் புலிகளை புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்துள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. நிச்சயமாக அவர்களில் சுமார் 2000 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். அங்கு 10000 முன்னாள் புலிகள் உள்ளனர். அவர்களில் 500 பேரை ஒன்று கூட்டி நாங்கள் வித்தியின் கட்சியையும் அவரது தலைமைத்துவத்தையும் ஏற்றுக்கொள்கின்றோம் என சத்தியம் செய்ய செய்யுங்கள் பார்ப்போம்.

அதன் பின்னர் „நான் த.தே.கூ வை மிரட்டிய கட்சி ஆயுதம்' என்று மேலுமொரு புத்தகத்தை எழுதி ஐ.தே.கட்சியின் எதிர்காலத் தலைவர் சஜித் பிரேமதாசவின் கால்கழுவலாம்..

பீமன்

4 comments :

கரன் ,  March 1, 2015 at 9:57 PM  

தோழர் சுதாவுக்கு நன்றி. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சுவிஸ் கிளை செயற்பாட்டில் உள்ளது என்று உணர்த்தியுள்ளீர்கள்-

வித்தியாதரன் டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் சித்தார்த்தன் செல்லாக்காசாகி சென்றுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

சுவிசிலே இரண்டு காதுகலிலும் இரண்டு ரெலிபோணை வைத்துக்கொண்டு பிளாட் பிளாட் என்று ஊழையிட்டுக்கொண்டு திரிகின்றவர்கள் இக் கூட்டத்திற்கு சென்று எங்கள் தலைவர் எவ்வாறு செல்லாக்காசி ஆனார். அவரை யாழ் மக்கள் நடந்து முடிந்த மாகாண சபைத்தேர்தலில் மூன்றாவது தெரிவாக தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று கேட்டிருக்கலாம் ..

Anonymous ,  March 1, 2015 at 9:58 PM  

மக்களை விற்று பிழைப்பு நடத்தும் கட்சிகளை மக்கள் நன்று உணர்ந்துள்ளனர் மேலும் விளிப்புணர்வு ஊட்டுவது அவசியம், ஆனால் இங்கு எழுதிய கருத்துக்கள் தூசண வார்த்தைகளுடன் எழுதியது வேதனை தருகின்றதுஇ புலிகளை பாசிசவாதிகள் என்றுவிமர்சிக்கும் தாங்கள் மக்கள் மத்தியில் கௌரவமான முறையில் அதனை எடுத்து சொல்ல வேண்டும், இப்படி அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதால் தான் மக்களும் வேறுவழியின்றி புலிகளையும், தேசியம் பேசி பிழைப்பு நடத்துவோரையும் ஆதரிக்க வேண்டியுள்ளது, முதலில் உங்களை திருத்திக் கொண்டு மக்களுக்கான கருத்தை எடுத்து சொல்லுங்கள்.

1. இறந்த ஊடகவியலாளர்களை வைத்து உதயைனை வளர்த்த அனுபவத்தின் ஊடாக மீண்டும் முன்னாள் போராளிகளை பலிக்கடாவாக்கி தனது கட்சியை வளர்க்கலாம் என்றல்லவா இவர் சொல்லுகின்றார், அதாவது புலிகளை இலகுவில் இனம் கண்டு அரச தரப்;புகள் கெல்லுவதன் ஊடாக தனது கட்சிக்கு பலத்த ஆதரவை திரட்டலாம் என்றது தான் இவரின் கணக்கு என்பது புலனாகின்றது.

2. இவர் புலிகள் உட்பட ஏனைய இயக்கங்களுக்குள்கூளும், கட்சிகளுக்குள்ளும் ஆட்களை வைத்து தகவல்கள் பெற்றுவந்ததாக சுவிஸில் வெளிப்படையாக கூறியிருகஆக்கிறாராம், உப்படிப்பட்டவரை எப்படி மக்கள் நம்ப முடியும்.

3. சுவி¨pலுள்ள அனைத்து உடயன் எடுபிடிகள் போல மற்றவர்களையும் நினைத்துவிட்டார் போலும்

பீமன் ,  March 2, 2015 at 9:29 AM  

அடைப்புக்குறிக்குள் ஒரு ஓ வை போட்டால் துாசனம் என்றியளே. இது சரியா நண்பரே. பீமன்

Arya ,  March 3, 2015 at 3:26 AM  

இவன் ஒரு தேச துரோகி இவனை அழிக்காமல் விட்டது கோட்டா செய்த மிக பெரிய தவறு, அப்படியான தவறுகளே கோட்டாவை இப்ப நெருக்கடிக்குள் தள்ளி உள்ளது,

" நெருப்பையும் பகையையும் மிச்சம் விடக்கூடாது"

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com