இளவாலை பொலிஸ் நிலையத்தை அகற்றக்கோரி குதிரைக் கஜேந்திரன் ஆர்ப்பாட்டம்.
கஞ்சா தங்கம் கடத்தலுக்கு போடப்பட்ட தடைக்கல்லை அகற்று என்பது மறுகருத்து!
குதிரையோடி பல்கலைக்கழகம் சென்ற காரணத்தால் செல்லமாக குதிரை கஜேந்தி என்றழைக்கப்படுகின்ற மகிந்தவின் எடுபிடி இன்று இளவாலை பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொலிஸ் நிலையத்தை அப்புறப்படுத்தவேண்டும் என்று கூக்குரலிட்டுள்ளார்.
காங்கேசன்துறை பொலிஸ் நிர்வாக வலயத்திற்குட்பட்ட இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் சுமார் 80 உத்தியோகித்தர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களது சேவை அப்பிரதேத்திலுள்ள சுமார் இருபத்துமுவாயிரத்து மக்களுக்கு கிடைக்கின்றது.
பிரதேசத்தில் இரவு நேரங்களில் அவசர நோய் ஏற்பட்டால் ஜீப் வண்டியில் நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்ப்பது முதல் பிரதேசத்தில் நடைபெறுகின்ற வீட்டுச்சண்டை, ரோட்டுச்சண்டை, களவு, கசிப்பு வடிப்பு, பெண்களுக்கெதிரான வன்செயல்கள், கொள்ளை, கொலை வரை சகல விதமான குற்றங்கள் மற்றும் சமூகவீரோத செயல்களுக்கு எதிராகவும் நீதியை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இப்பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையேற்றுள்ள மிகவும் இளவயதும் துடிப்புமுள்ள பொலிஸ் பரிசோதர் மஞ்சுள டீ சில்வாவின் செயற்திறன் மக்களை மிகவும் கவர்ந்திழுத்துள்ளதுடன் அவர் மக்களை தன் தோழர்களாக்கி அப்பிரதேசத்தில் இடம்பெற்றுவந்த பாரிய குற்றச்செயல்கள் பலவற்றை முறியடித்துள்ளார்.
முஸ்லிம் வர்த்தகர்களால் மாதகல்லூடாக கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற போதைப்பொருட்களில் முறையே இரு தடவைகளில் 105 மற்றும் 81 கிலோ கஞ்சா கடந்த காலங்களில்; கைதுசெய்யப்பட்டதுடன் தொடர்ந்து இவ்வாறான கடத்தல்களை முறியடிக்கும் நோக்கில் தொடர் முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றார் பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள டீ சில்வா. இப்போதைப்பொருள் இறக்குமதியின் ஊடாக தமது சமுதாயம் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கில் பிரதேச மக்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு மிகவும் ஒத்தாசை புரிந்து வருகின்றனர்.
அத்துடன் பிறிது இரு சந்தர்ப்பங்களில் மாதகல்லில் வைத்து முறையே 48 , 10 கிலோகிராம் உருக்கிய தங்கங்கள் கடத்தப்பட்டபோது கடற்படையினரால் பைப்பற்றப்பட்டவிடயம் நினைவிருக்கலாம். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் புலிகளுக்கு சொந்தமான 1300 கிலோ கிராம் ஓரிடத்திலுள்ளதாகவும் அவை சிறிது சிறிதாக உருக்கப்பட்டு இந்தியாவிற்கு கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்றும் இதற்கும் குதிரை கஜேந்திரனுக்கும் தொடர்பு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த 1300 கிலோ தங்கம் தமிழ் மக்களிடம் புலிகள் அபகரித்த தங்கமும் மக்கள் வறுமையில் புலிகளின் வங்கிகளில் அடவு வைத்தவையும் தவிர வேறொன்றும் இல்லை. குறித்த தங்கத்தின் மறைவிடத்தை கண்டு பிடிப்பதற்கு பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள சில்வா தலைமையாலான பொலிஸ் குழு உட்பல பல பொலிஸ் குழுக்கள் புலனாய்வில் இறங்கியுள்ளதுடன் கரையோர பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையிலேயே குதிரை கஜேந்திரன் இளவாலை பொஸிஸ் நிலையத்தை அகற்றக்கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் நகைப்புக்கிடமான விடயம் யாதெனில் சுமார் 23000 மக்களுக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தினை அகற்றக்கோரி குதிரைக்கு பின்னால் நின்றவர்கள் சுமார் 20 பேர். இந்த இருபது பேரும் யார் என்பதும் குதிரையினால் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் இந்த 20 பேரே உள்ளனர் என்பதும் ஊடகங்களை தொடர்சியாக பார்வையிடுகின்றோருக்கு புரியும்.
இறுதியாக குறித்த பொலிஸ் நிலையத்தை குதிரை அகற்றக்கோருவதற்கான காரணம் மக்கள் மீதுள்ள அக்கறையில் அல்ல. மாறாக மேற்படி கஞ்சா மற்றும் தங்கக்கடத்தல்காரார்களுக்கான வழியை திறந்து கொடுப்பதற்கு என்றும் அவர்களிடம் இதற்காக குதிரை பெருந்தொதை பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
எது எவ்வாறாயினும் இன்று யாழிலுள்ள படையினர் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையில் குறிப்பிடதக்க நியாயம் இருந்தாலும் சிவில் நிர்வாகத்தை நிலைநாட்ட குடிகொண்டுள்ள பொலிஸாரை வெளியேற்று என்று கோஷமிடுவது கேலிக்குரியது.
இலங்கை காணிச்சட்டத்தின் பிரகாரம் பொது தேவை ஒன்றுக்கு தனியாரின் காணியை சுவீகரிக்கலாம் என்பதும் பொலிஸ் நிலையம் என்பது அதியாவசிய தேவை என்பதும் அதற்காக காணி ஒன்றை சுவீகரிக்கலாம் என்பதையும் குதிரை குதிரையோடாமல் பல்கலைக்கழகம் சென்றிருந்தால் படித்திருப்பார் என்று கூறத்தோன்றுகின்றது.
0 comments :
Post a Comment