பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரடியாக பறிக்கப்பட்டன. முறுகல் ஆரம்பமா?
ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலத் தலைவர் என மகுடம் சூட்டவென பிரதமர் ரணில் விக்ரமசிங்க வளர்த்துவரும் பாதுகாப்ப இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அமைச்சுப் பொறுப்புக்களை குறைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பில் பாதுகாப்பு செயலாளரால் 13 ம் திகதி விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அமைச்சின் கீழிருந்த 15 நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் மாத்திரமே அவருக்கு எஞ்சியுள்ளன. அவை இராணுவ சேவை அதிகார சபை, பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் சபை கல்லூரி, பாதுகாப்பு சேவை பாடசாலை மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகியவையாகும். இராணுவ சேவை அதிகார சபையின் தலைவராக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளார்.
ருவான் விஜேவர்த்தனவிற்கு முப்படை மற்றும் அதனோடு தொடர்புடைய எவ்வித அதிகாரமும் இல்லை. அனைத்து அதிகாரங்களும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் கீழ் வருகிறது.
பாதுகாப்பு அமைச்சு அது தொடர்பான அனுபவம் மற்றும் தெளிவு இல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
0 comments :
Post a Comment