பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அன்புக்குரியவரோடு பேச உதவும் அதி நவீன கருவி கண்டுபிடிப்பு!
கேன்சர் உட்பட பல உயிர்கொல்லி நோய்கள் இந்த உலகில் இருந்தாலும் உயிரை மட்டும் விட்டு வைத்து, தினம் தினம் நரக வேதனை தரும் நோய் பக்கவாதம். கை கால்கள் முடக்கப்பட்டு தான் உணர்வதை தன்னை நேசிப்பவர்களோடு பேசமுடியாத இவர்களின் வேதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாதது.
சமீபத்தில் இந்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை க்ளேர் வில்சன் என்பவர் நியூ சயின்டிஸ்ட் அறிவியல் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார். இதில் பல ஆச்சர்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுவரை, பக்கவாத நோயாளிகளின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ள பெரிய அளவிலான எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கருவிக்குள் அவர்களை நுழைக்க வேண்டும் என்ற நிலையே இருந்து வந்தது.
இந்நிலையில் லண்டனை சேர்ந்த ஆட்ரியன் ஓன் தலைமையிலான ஆய்வுக்குழுவும், ஆஸ்திரிய நிறுவனமான ஜிடெக் என்ற நிறுவனத்தின் ஆய்வுக் குழுவும் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வுகளின் படி, நோயாளியின் கையில் ’வைப்ரேட்டிங் பேட்’ ஒன்றைக் கட்டுவதன் மூலம் அவர்களின் மூளையில் ஏற்படும் உணர்வுகளை அறிய முடியும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தக் கருவியை எங்கும் எளிதில் எடுத்துச் செல்லவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியத்தில் உள்ள லீக் பல்கலைக்கழகம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து செய்த ஆய்வில் எத்தனை முறை உங்கள் கைகளில் வைப்ரேஷன் ஏற்பட்டது என்ற கேள்விக்கு நோயாளிகள் மனதில் நினைத்த பதிலை துல்லியமாக கணிக்க முடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆட்ரியன் ஓவியன் உணர்வற்ற நிலையில் உள்ள நிறைய பேரை ஆய்வு செய்ததில் ஐந்தில் ஒருவருக்கு டென்னிஸ் விளையாட வெண்டும் வீட்டில் நடக்க வேண்டும் என்று நினைப்பதை கண்டுபிடித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் மருத்துவர்கள் எதையும் உணர முடியாதவர் என்று நினைத்த 34 வயது கனடியர் ஒருவர் ஹிட்ச்காக் என்ற இயக்குனரின் படத்தை புரிந்து கொள்வதையும் நிரூபித்தார்.
நோயாளிகள் உணர்வற்ற நிலையில் இருப்பதாக தவறான முடிவெடுக்காமல் தடுக்க இந்த புதிய கருவி உதவும். உண்மை என்னவென்றால் அவர்களால் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
0 comments :
Post a Comment