Friday, February 27, 2015

சட்டப் புலியையும் கலைக்க பாக்கும் கட்டப்பிராய் நரி !

ஊரில வீரவசனம் பேசி மக்களை உசுப்பேத்திப்போட்டு அதுகள் கஞ்சிக்கும் வழியில்லாமல் கஷ்டப்பட தான் மட்டும் மகிந்த வச்ச விருந்தில எல்லாம் கலந்து வாய்கிழிய சிரிச்சு கூழை கும்புடு போட்டு முந்தி ஒண்டுக்கும் வழி இல்லாமை நிண்டபோது, தான்ஒரு தமிழ் கட்சியிண்ட செயலாளர் நாயகமாக இருந்தும் மகிந்தவின்ர மீன்பிடி அமைச்சில,மகிந்த சம்பளத்துக்கு வேலை கொடுத்த நன்றிக்கு வாலை ஆட்டி, திண்டு வண்டி வீங்கினவர் இப்ப சுமந்திரனை சீண்டுறார் .

பின்னணி தெரியாம பேசக் கூடாது. சட்டவாதி எண்டதால வார்த்தையள வைச்சு விளையாடுறார் எண்டவருக்கு தெரியும் , இரவோட இரவா கோத்தபாய கொழும்பில விடுதிகளில இருந்து சனத்த பஸ்சில ஏத்தி அனுப்பவிருக்க சுமந்திரன் தன்ர சட்ட மூளையால தான் அதுக்கு எதிராகஇடைக்கால தடை உத்தரவு எடுத்தவர் . அப்ப அவர் எம் பி இல்ல .ஆனா நீங்கள் எம் பி.

நீங்கள் முட்டாள் இல்லை தான். எத்தனையோ பல்கலைகழக பொடியள் படிப்பை விட்டுப்போட்டு மண்ணில் நிண்டு போராட. நீங்கள் மட்ராசில படிச்சு பட்டம் வாங்கினதாய் பாராழுமன்ற பதிவில இருக்கு. நீங்கள் படிச்சு வாங்கினதோ இல்ல ஆரையும் பிடிச்சு வாங்கினதோ அது சிதம்பர ரகசியம். விசாரிச்சு பாத்தாதான் தெரியும். ஏனெண்ட அப்ப நீங்கள் படிப்பை விட அந்த பெட்டையின்ர பொடியனை வெருட்டி கலைச்சுபோட்டு அவவோட கோகிலம் பாடுறதில தான் படுபிசியா திரிஞ்சனியள். இடைக்கிடை இஞ்சவந்து அரசியல் துறை பொடியளை உசுப்பேத்தி போட்டு போட்டில இந்தியா திரும்பிபோய் களைப்பு தீர கோகிலம் பாடி திரிஞ்சனியள்.

உள்குத்து வேலை மன்னனான நீங்கள் நெருப்பு தினம் நடத்தி தோழர்களை உசுப்பேத்தி புலிகளுக்கு பலிகொடுத்து போட்டு பிறகு இந்தியன் அமைதி படையோட வந்து எங்கட சனத்தின்ர அமைதிய கெடுத்தியள்.

வரதர் படிச்சவர் கொஞ்ச காலம் விரிவுரையாளராய் இருந்தவர். அவரோட புடுங்கு பட்டியள். பாராளுமன்றத்தில மாகாண சபை அதிகாரம் பற்றி பேசாம ஊரில மண்டையன் குழு நடத்தி எல்லாரையும் திரும்பவும் இந்தியா ஓடவச்சியள்.

கட்சிய புனரமைக்க கேதீஸ்வரன் திட்டமிட நீங்கள் குடுத்த குடைச்சலாலா அவரையும் விலகி போகப் பண்ணினியள். கட்சி பணத்துக்கு கணக்கு கேட்டவை , சொத்துக்களை ஏன் உங்கட குடும்ப சொத்த வைச்சிருக்கிறியள் எண்டு கேட்டவைக்கு வில்சனும் நானும் முடிவெடுத்து தான் எல்லாம் செய்யிறம் எண்டு விறுக்கா பண்ண வெறுப்பில அவங்களை வெளியேற பண்ணினியள். வில்சனும் கனடாவில. சொத்தெல்லாம் யாரிட்ட சொல்லுங்கோ? சு பி .
திறமைசாலிகள் , மக்களை பற்றி சிந்திப்பவர்கள் , படித்தவர்கள் , சுயமாக சிந்திப்பவர்கள், ஒருத்தரையும் நீங்கள் வைச்சிருக்கமாட்டிள் . இருந்த ஒரே ஒரு சூழலியலாளரையும் தம்பிக்கு அந்த மந்திரி பதவிய தரேல்ல எண்டு கட்சியால கலைச்சு போட்டியள் . இப்ப உங்கட அடிமடியில கைவைக்க போகிறார் எண்ட பயத்தில சுமந்திரனோட மல்லுக்கு நிக்கிறியள். கூடமைப்பு என்ன உங்கட முதுசமோ ? அல்லது உங்கட மனிசி கொண்டுவந்த சீதனமோ ?
தராக்கி சிவராமிட்ட கெஞ்சி கரிகாலன்ர காலை பிடிச்சு புலிகளின்ர வாலில தொங்கி மாவையின்ர கடைக்கண் பார்வையால தான் சனம் உமக்கு வாக்கு போட்டது. ஆனா இனிப்போடது.நீங்கள் வடக்கில அரசுக்கு எதிரா கத்திறதும் பிறகு தெற்கில அவங்கள் வைக்கிற பாட்டியில போய் நிக்கிறதும் சனத்துக்கு தெரிஞ்சு போச்சுது.

நீங்கள் கட்டபிராயில கல்லு குத்துது எண்டு உங்கட வீடு மட்டும் காப்பற் றோட் போட்டு அதுக்கங்கால இருக்கிறசனம் சிங்கள சனம் எண்டே போடாம விடசொன்ன நீங்கள் எண்டு சனம் கேட்குது .

கனக்க ஈ பி ஆர் எல் எப் காரர் டக்ளசுக்கு பின்னால் போட்டங்கள் மிச்ச பேரையும் சுகு சுத்தி போட்டுது. நீங்களும் உங்கட தம்பியும் கொஞ்ச அல்லக்கைகளும் தான் இப்ப மிச்சம். உங்களுக்கு போடச்சொல்லி மற்றவை சொன்னாலும் சனம் போடாது அவையளும் கேட்கமாட்டினம். இந்த சீத்துவத்தில சுமந்திரனை தேசியபட்டியல் எண்டு ஏன் சீண்டுறீங்கள்.

முந்தி கிடைச்ச சந்தர்பத்தை எல்லாம் தவற விட்டிடம் இனியும் அந்த தவறை விட கூடாது எண்டு வவுனியாவில வைச்சு கூடமைப்பின்ர தலைவர் சம்மந்தன் ஐயா சொன்ன படிதான் சுமந்திரன் நடக்கிறார் . அனைவரும் அப்பிடித்தான் நடக்கவேணும். மணி கட்டின மாடு சொன்னா கேட்கவேணும் .
தலைமைக்கு கட்டுப்படாத பேச்சளார் தேவையோ எண்டு கூட்டமைப்புக்குள் குரல் கேட்குது. உங்களுக்கும் கெதியில கேட்கும். அடுத்த தேர்தல்வரை தாக்குபிடியுங்கோ. கட்டாயம் தோற்பியள். கோகிலத்தோட காசி ராமேஸ்வரம் எண்டு கடைசி காலத்தை கோவில் குளம் எண்டு போய் தோழர் நபாவுக்கும், நம்பிவந்த தோழர்களுக்கும், தமிழ் சனத்துக்கும் செய்த துரோகத்துக்கும் பிராயச்சித்தம் தேடுங்கோ.

காரியச்சித்தன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com