போலி ஆவணம் தயாரித்தி திஸ்ஸ அத்தநாயவிற்கு விளக்கமறியல்!
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐதேக விலிருந்து வெளியேறி ஸ்ரீலசு கட்சியில் இணைந்து கொண்டதுடன் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார்.
ஸ்ரீலசு கட்சியின் பொதுச் செயலாளர் பொதுக் கூட்டணிக்கு சென்றதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அத்தநாயக்கவை விலைக்கு வாங்கிய ஸ்ரீலசு கட்சியினர் நீங்கள் எமது பொதுச் செயலாளரை எடுத்தால் நாம் உங்கள் பொதுச் செயலாளரை எடுப்போம் என்று வீராப்பு பேசினர். அத்துடன் அத்தநாயக்கவுக்கு ஸ்ரீலசு கட்சியில் மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கியிருந்த சுகாதார அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
இவற்றுக்கு பிரதியுபகாரமாக மஹிந்த சார்பில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கிய அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இருப்பதாகவும் அவ்வொப்பந்தத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரபால சிறிசேனவும் கையொப்மிட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன். அதன் பிரதியை தான் கட்சியிலிருந்து வெளியேறும்போது எடுத்து வந்துள்ளதாகவும் காண்பித்தார்.
அத்தநாயக்கவின் குற்றச்சாட்டை மறுத்த ரணில் , மைத்திரி ஆகியோர் குறித்த ஆவணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டனர். ஆவணங்கள் தொடர்பான நிபுணர்களால் குறித்த ஆவணம் பரிசீலணை செய்யப்பட்டபோது, அது போலியான ஆவணம் என்றும் மேற்படி இருவரதும் கைபொப்பங்களின் ஸ்கேன் பிரதிகளே குறித்த ஆவணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்பலமானது.
இது தொடர்பில் தொடர்விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் திஸ்ஸ அத்தநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தபோது அவரை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment