போர்க்குற்றம் தொடர்பில் தகவல்களை வழங்காமையால் அமெரிக்காவின் ராப் பதவி விலகல்
இலங்கையின் இறுதிப் போரின்போது வெள்ளைக் கொடியை தாங்கி வந்த விடுதலைப் புலிகளை படையினர் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் சம்பவம் உட்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தகவல்களை வழங்காத குற்றச்சாட்டு அமெரிக்காவின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமரிக்காவின் போர்க்குற்றம் தொடர்பான தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் பதவிவிலகவுள்ளார். பொரின் பொலிஸி மெகசின்(foreign policy magazine) என்ற சஞ்சிகைக்குசெவ்வியளித்துள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இலங்கையின் மனிதப் படுகொலைகள் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான ஸ்டீவன் ரட்னர் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் ராப்பின் பதவிவிலகலை அவர் உறுதிப்படுத்தவில்லை. ராப்பின் பதவி விலகல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எனினும் அவரின் நெருங்கியவர்களின் தகவல்படி அவர் அமரிக்க ராஜாங்க திணைக்களத்தில் இருந்து விலகிச் செல்லவுள்ளதாக பொரின் பொலிஸி மெகசின் தெரிவித்துள்ளது.
இதற்காக ராஜாங்க திணைக்களம், உத்தியோகபூர்வமாக அவரின் பதவிக்காக ஒருவரை தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளதாகவும் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் இறுதிப்போரின் போது வெள்ளைக் கொடிகளை ஏந்தி சரணடைய வந்த விடுதலைப்புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டமை உட்பட்ட விடயங்களை ஆராய ராப் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது சில தகவல்களை இலங்கையில் உள்ள அமரிக்க தூதரகம் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் ராப் இலங்கைக்கு கடந்த வருடம் ஜனவரி 6ஆம் திகதி சென்று வந்ததன் பின்னர் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் எவ்வித தகவல்களை தரவில்லை என்று ஸ்டீவன் ரட்னர் குற்றம் சுமத்தியுள்ளார்..
0 comments :
Post a Comment