இந்த தேர்தல் யுத்தம் இருப்பது மகிந்த - மைத்திரியிடையே அல்ல. நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கின்ற, பிறநாடுகளுடன் கைகுலுக்குகின்ற ஈனியா திருட்டுக் கும்பலுடன்தான் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகின்றார்.
மேற்கத்தேய சக்திகளுக்குத் தேவையாக இருப்பது இலங்கையை வலுவிழக்கச் செய்து, முதுகெலும்பு இல்லாத தலையாட்டு பொம்மையான தலைவர் ஒருவரை நாட்டில் தோன்றச் செய்து, இருக்கின்ற கொஞ்சத்தையும் முழுமையாக சுருட்டிக் கொள்வதற்கேயாகும். அந்த மேற்கத்தேயத்தின் விருப்பு வெறுப்புகளைத்தான் இன்று இந்த அசுத்தமான கூட்டத்தினர் செய்துகொண்டிருப்பதாக நேற்று முன்தினம் பொராலையில் இடம்பெற்ற தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பு ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
ஞானசார மேலும் குறிப்பிடுகையில் -
'இந்த ஜனாதிபதித் தேர்தலானது மிக முக்கியமானதொரு தேர்தலாகும். சுதந்திரத்தின் பின்னர் சென்ற 30 வருட இருண்ட யுத்தத்தில் நாங்கள் எல்லோரும் சந்தித்த துன்பங்கள் பற்றி புதிதாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஆயினும், கொழும்பிலிருந்து அரசியலுக்குள் பிரவேசித்த ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தை பயங்கரவாதம் என்றுகூட சரியாகச் சொல்லத் தெரியாத கையாலாகாதவர்களாகவே இருந்தனர். யுத்த வெற்றியின் பின்னர் அன்று யுத்தத்தில் தலைமை வகித்த சேனாதிபதிக்கு எதிராக 2010 ஆம் ஆண்டின் பின்னர் பல்வேறு சூழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. தற்போது அதன் எண்ணிக்கை பன்மடங்காகியுள்ளது.
நாங்கள் மரியாதை செலுத்திய சிரிசேன இவ்வாறான அசுத்தமான கூட்டத்தாருடன் இணைந்து கொள்வார் என்று நாங்கள் நினைக்கவில்லை. தற்போது சிறிசேன நான் வெளியிலிருந்து கொண்டு சூழ்ச்சி செய்வதாகவும் உள்ளே இருந்து கொண்டு சூழ்ச்சி செய்வதாகவும் சொல்கிறார். சரியாயின் அவரைக் கைது செய்ய வேண்டும். ஏன் தெரியுமா? தற்போது நாடு அபாயத்தில் இருந்துகொண்டிருக்கின்றது.
பிரபாகரனை நந்திக் கடலில் உள்ள களப்பில் கொன்றொழித்தது போன்று, சந்திரிக்கா - ரணில் போன்ற இந்தக் கொள்கையுடைய அரசியல்வாதிகளையும் நீக்க வேண்டும். இன்று உயிர்நீத்த 27,000 படையினரையும் அவமானப்படுத்துகின்றார்.
நாட்டுக்கு கொடுவினை செய்கின்ற இறைச்சி ராத்தலே கேட்கின்ற இனவாத முன்னணியை இல்லாதொழிக்க வேண்டும். இது மகிந்தவுக்கும் மைத்திரிக்கும் இடையிலான யுத்தம் அல்ல. இது பொதுமக்கள் சிந்திக்க வேண்டிய காலகட்டமாகும். ஏனென்றால் இந்த பெடரல் நடைக்குழுவினர் நாட்டுக்குள் சக்தி பெற்றால் அதனைத் தோற்கடிப்பது இலகுவான காரியம் அல்ல. இந்நாட்டுக்கு கொடுவினை செய்கின்றவர்கள் நாட்டினுள்ளே சக்தி பெற்றுவிட்டால் தலைவர் இல்லாத ஆட்சி மட்டுமே மீதமாகும்.
மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சொல்லும் அளவுக்கு என்னதான் பிழை - குற்றம் செய்திருக்கின்றார் என நாங்கள் கேட்கின்றோம். இது சிங்களவர்கள் பிரிந்துவிடும் நேரமல்ல. இந்நேரம் மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இந்த நடைக் குழுவினர் நாட்டுக்கு என்னதான் பெரிதாக செய்துவிடப் போகிறார்கள்? என்பதை புத்துசாதுரியத்துடன் சிந்தித்துப் பாருங்கள்.
ஒருபுறம் நடப்பது என்னவென்றால் இந்த சூழ்ச்சிகள் காரணமாக சிங்கள மக்களின் கருத்துக்களை இரண்டாகப் பிரிப்பது. சம்பிக்க 10 வருடங்கள் மகிந்த அரசாங்கத்தில் இருந்து எத்தனையோ விடயங்களை சாதிக்க முடியாது போனதாகக் கூறுகின்றார். ஒருவரால் செய்ய முடியாததை பலர் ஒன்றிணைந்துள்ள விஷக் குழுவினரால் எவ்வாறு சாதித்துவிடுவார்?
கள்ளங்கபடமற்ற நாடு, பயம் சந்தேகமின்றிய நாளை எனக் குறிப்பிடும் சிரிசேனவின் குண்டர்கள் கதுறுவலையில் துண்டுப் பிரசுரங்களைப் பகிர்ந்தளித்த பௌத்த மதகுருமார்களிடம் நடந்து கொண்ட முறை பற்றி நாங்கள் கண்டோம். அந்த “சூகலா” கடவுளின் மமிக்கு என்ன நடந்தது என்று பதில் கூறுமாறு நான் சவால் விடுகின்றேன். இந்தக் கள்வர் கும்பலை ஒன்றிணைந்து நாங்கள் தோற்கடிக்க வேண்டும்." என்றார்.
ராவண பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிடும் போது,
“2005 இல் மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக முயற்சி செய்த சந்திரிக்காதான் இன்று “மிஸ்டர் பிரபாகரன்“ எனச் சொல்லிச் சொல்லி மோகினி போல வெளியே வந்துள்ளார். ரணிலோ பிரதமராவதற்கு எவ்வளவோ கனவு காண்கிறார். சிரிசேன ஒரு தலையாட் டு பொம்மை. எந்தவொரு சக்தியும் அவரிடம் இல்லை. சந்திரிக்காவுக்குத் தேவையானது என்னவென்றால், அடுத்தவர்களுடன் ஒன்றிணைந்து கொண்டு நாட்டை காட்டிக் கொடுப்பற்கு. 11 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தார். நாட்டுக்காகச் செய்தது ஏதுமில்லை. புலிகளுடன் காதல் நாடகம் மாத்திரம்தான் ஆடினார்.
நாங்கள் மிகவும் உத்தமமாக வந்தனை செய்துவந்த சோபித்த தேரரும் இந்தக் கும்பலுக்குள் சிக்கிக் கொண்டார். என்றாலும், அவர் இப்போது கூடுதலாக வைத்தியசாலையிலேயே இருக்கின்றார். ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று நினைக்கிறார் போலும். ர(த்)தன ஹாமுதுறு பற்றிப் பேசிப் புண்ணியமில்லை. இன்று ஹெல உறுமய மிகவும் சுயநலவாத தன்மையுடனேயே செயற்படுகின்றது. எந்தவொரு சூழ்சியிலும் அவரும் பங்கு கொள்கிறார். நாட்டின் மீது அன்பு செலுத்துபவர்கள் நிச்சயம் இவர்களுக்கு எதிராகச் செயற்படுவார்கள்.
சந்திரிக்கா அம்மையார் மீண்டும் 09 ஆம் திகதி மீண்டுமு் போக வேண்டிவரும். இன்று தாய்மார் தங்கள் பிள்ளைகளுக்கு உணவு ஊட்ட எவ்வளவு சிரமப்படுகிறார்கள் தெரியுமா? பல்லிகளைக் காட்டுகிறார்கள், வண்ணாத்திகளைக் காட்டுகிறார்கள். எதிர்வரும் 9 ஆம் திகதியின் பின்னர் சந்திரிக்கா அம்மையாரின் படத்தை கண்ணாடி உறையிட்டு சுவரில் தொங்கவிட்டால் பிள்ளைகளுக்கு உணவூட்டத் தேவையில்லை. அதைப் பார்த்துக் கொண்டு கடும் கோபத்தினால் சாப்பிட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே போகும்.” எனக் குறிப்பிட்டார்.
சிங்களத்தில் - அநுராதா ஹேரத்
தமிழில் - கலைமகன் பைரூஸ்
No comments:
Post a Comment