வீரவன்ஸ கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறிசேனவுக்கு ஆதரவு
இலங்கையில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்துவரும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல சுரங்க ஜாகொட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.கொழும்பில் வெள்ளியன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இதனை அறிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்றஉறுப்பினராக அவர் செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு தேர்தல் அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக்கான கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
கருவலகச்வேவ மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. பெலியத்த தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாரின் வீடு வியாழன் இரவு தாக்கப்பட்டுள்ளதாகவும் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment