Sunday, January 4, 2015

மஹிந்தாவின் ஆசிர்வாதத்துடன் வெளிநாட்டுக்கு தப்பியோடினார் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி

புலிகளின் முன்னாள் ஆயுதக் கடத்தல் மன்னன் கே.பி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இவரை மகிந்த கும்பலே அனுப்பி வைத்துள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றது. எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மஹிந்தா அத் தேர்தலில் தோல்வியடைவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த கையுடன் மலேசியாவில் வைத்து கே.பியை கைது செய்யதாக மஹிந்த அரசு அறிவித்தது. சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த கே.பி பின்னர் விடுதலை செய்யப்பட்டு அரசின் செல்லப் பிள்ளையாக வலம் வந்ததுடன் செஞ்சோலை சிறுவர் இல்லத்தையும் கிளிநொச்சியில் நடத்தி வந்தார்.

இவ்வாறான நிலையில், மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றி பெற்றால் முன்னாள் புலிகள் அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவேன் என தெரிவிழத்துள்ள நிலையில் கே.பி கைது செய்யப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும் என்ற அச்சத்தில் இவரை தப்பியோட விட்டுள்ளதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment