டக்கிளசுக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டமை தொடர்பில் முதலைக்கண்ணீர் வடிக்கின்றார் விமல்வீரவன்ச.
முன்னைநாள் அமைச்சரும் ஈபிடிபி என்கின்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான கே.என் டக்ளஸ் தேவானந்தாவிற்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக முன்னைநாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல்வீரவன்ச கடந்த பாராளுமன்ற அமர்வில் கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் பாராளுமன்றில் பேசிய வீரவன்ச கடந்த சுமார் முப்பது வருடகால யுத்தத்தில் சுமார் 24 வருடங்கள் (80 விழுக்காடு காலப்பகுதி) மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளின் புலிகளுக்கு எதிரான போருக்கு தோழோடு தோழ் நின்று உழைந்த தலைவரது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றும் புதிய அரசின் இச்செயற்பாட்டினூடாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் புதிய அரசு டக்ளஸ் தேவானந்தாவிற்கு புலிகளால் அச்சுறுத்தல் உள்ளதா என்பதை பரிசீலனை செய்யாது பாதுகாப்பினை வாபஸ்பெற்றுள்ளதா என்பதை அறியாது மேற்படி கவலையை வெளியிட்டுள்ளாரா அன்றில் தொடர்ந்தும் சிங்கள மக்களுக்கு புலிப்பீதியேற்றுவதற்காக நீலிக்கண்ணீர் வடித்துள்ளாரா என்பதே இங்கு எழுகின்ற கேள்வியாகும்.
ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு இன்று பாதுகாப்பு அவசியமற்ற ஒன்றாகும் காரணம் தற்போது ஈபிடிபி அமைப்பின் அதிக தொகையினர் முன்னாள் புலிகளாகவுள்ளனர். இறுதி யுத்தத்தில் சரணடைந்த இவர்கள் இன்று ஈபிடிபி உறுப்பினர்களாகமாறியுள்ளதுடன் புலம்பெயர் தேசத்திலிருந்து யாழ்குடாநாட்டில் கால்பதித்துள்ள புலிகளும் டக்ளசின் வியாபாரச் சகாக்களாக மாறியுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த பல ஈபிடிபி உறுப்பினர்கள் அவ்வமைப்பை விட்டு வெளியேறியுள்ளதுடன் அவர்கள் டக்ளசின் புலிகளுடனான கூட்டை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் டக்கிளசின் உயிருக்கு புலிகளால் எந்த ஆபத்தும் இல்லை. அதற்கும் மேலாக ஏதும் நிகழுமாயின் அது ஈபிடிபி யின் உள்வீட்டுப்பிரச்சினை.
இந்நிலையில் டக்ளசுக்கு பாதுகாப்பு வழங்குவதை விடுத்து புலிகளுடன் இரண்டரக்கலந்துள்ள டக்ளஸ் மீண்டும் மஹிந்தவை கொண்டுவருவதற்கு மேற்கொள்ளக்கூடிய தேசவிரோத செயல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவது அவசியமானதாகும்.
0 comments :
Post a Comment