ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு:-
01.ரணில் விக்ரமசிங்க - பிரதமர், கொள்கை வகுப்பு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
02.ஜோன் அமரதுங்க - பொதுசன அமைதி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர்
03.ஜோசப் மைக்கள் பெரேரா - உள்விவகார அமைச்சர்
04.காமினி ஜயவிக்ரம பெரேரா - உணவு பாதுகாப்பு அமைச்சர்
05.மங்கள சமரவீர - வெளிவிவகார அமைச்சர்
06.கரு ஜயசூரிய - புத்தசாசன அமைச்சர்
07.லக்ஷமன் கிரியெல்ல - பெருந்தோட்டத்துறை அமைச்சர்
08.ரவி கருணாநாயக்க - நிதி அமைச்சர்
09.ரவுப் ஹக்கீம் - நகர அபிவிருத்தி, நீர்வள, நீர்முகாமைத்துவ அமைச்சர்
10.பாட்டளி சம்பிக்க ரணவக்க - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்
11.ராஜித சேனாரத்ன - சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்
12.துமிந்த திஸாநாயக்க - நீர்பாசன அமைச்சர்
13.கபீர் ஹசிம் - பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
14.எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன - காணி அமைச்சர்
15.சஜித் பிரேமதாஸ - வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர்
16.விஜேதாஸ ராஜபக்ஷ - நீதி அமைச்சர்
17.கயந்த கருணாதிலக - ஊடகத்துறை அமைச்சர்
18.நவீன் திஸாநாயக்க - சுற்றுலாத்துறை அமைச்சர்
19.அர்ஜுன ரணதுங்க - துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்
20.அப்துல் ரிசாத் பதியூதின் - தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்
21.பழனி திகாம்பரம் - தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
22.டி.எம்.சுவாமிநான் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சர்
23.அக்கிலவிராஜ் காரியவசம் - கல்வி அமைச்சர்
24.தலதா அத்துகொரல்ல - வெளிநாட்டு வேலைவாய்ப்பு
25.ரஞ்சித் மத்தும பண்டார - உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர்
26.பி.ஹெரிசன் - சமூக சேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சர்
27.சந்திராணி பண்டார - மகளிர் விவகாரம்
ராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு:-
01.நந்திமித்ர ஏக்கநாயக்க - கலாசார, கலைதுறை அமைச்சர்
02.வி.ராதாகிருஷ்ணன் - கல்வி அமைச்சர்
03.பைசஸ் முஸ்தபா - சிவில் விமான சேவைகள் அமைச்சர்
04.பாலித ரங்கேபண்டார - மின்வலு எரிசக்தி அமைச்சர்
05.திலிப் வெதஆராச்சி - மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர்
06.ரோசி சேனாநாயக்க - சிறுவர் துறை அமைச்சர்
07.ராஜீவ விஜேசிங்க - உயர்கல்வி அமைச்சர்
08.ருவான் விஜேவர்த்தன - பாதுகாப்பு அமைச்சர்
09.கருப்பையா வேலாயுதன் - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
10.நிரோசன் பெரேரா இளைஞர் விவகார அமைச்சர்
No comments:
Post a Comment