Saturday, January 10, 2015

நாடெங்கிலும் பாற்சோறு வழங்கி சந்தோசக் களிப்பில் மக்கள்!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக, புதிய ஜனநாயக முன்னணியிலிருந்து போட்டியிட்டு, இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் 6 ஆவது ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிரிசேனவின் வெற்றியையிட்டு, நாடெங்கிலும் தங்களது வெற்றியாக மக்கள் பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பகிர்ந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வருகின்றனர்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களிலும் பார்க்க இம்முறை (2015) தேர்தல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டிய தேர்தலாகும் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதியின் பதவியேற்பின் பின்னர் நிகழ்த்திய முதலாவது கன்னிப் பேச்சில் அவரது முதலாவது செயற்றிட்டம் மக்களின் வறுமையை ஒழிப்பதே என்பதில் நாட்டு மக்கள் பூரண நம்பிக்கை வைத்துள்ளமையைக் கண்கூடாகக் காணக்கூடியதாகவுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்களின் அதிகப்படியான வாக்குகளினாலேயே ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன தெரிவுசெய்யப்பட்டார் என்பதை அரசியல் வட்டாரங்கள் ஒருபோதும் மறக்க மாட்டாது என்பதும் வரலாற்றில் ஒருபோதும் கிடைக்காத ஆதரவு மைத்திரிபால சிரிசேனவுக்குக் கிடைத்துள்ளது.

மிக விரைவில் அமைச்சரவை இன்று அல்லது நாளை கூடவுள்ளதுடன் அதில் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் பல சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

35 பேரைக் கொண்ட புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்களும் 10 பிரதியமைச்சர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இவ்வமைச்சரவை 03 மாதங்களுக்குத் தற்காலிக அமைச்சரவையா இருக்கும். அதன் பின்னர் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நிரந்தர அமைச்சரவை தாபிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கீழுள்ள படங்கள் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் அஜ்மல் ஸத்தாரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் வெற்றிக் களிப்பில் பாற்சோறு வழங்கும் போது எடுக்கப்பட்ட படங்கள்







தர்கா நகர்

புத்தளம்

நுவரெலியா
(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment