Sunday, January 11, 2015

மஹிந்தவின் அடுத்த முயற்சியும் பிசகியது. கட்சியை விட்டு கழன்று செல்லும் அமைச்சர்கள் எண்ணிக்கை 40ஐ தாண்டுகின்றது.

டக்ளசுக்கு கதவு மூடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற மறுகணமே பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றிருந்தார். ஆனால் அறுதிப்பெரும்பாண்மை இன்றி ரணிலால் பிரதமராக நீடிக்க முடியாது என்றும் தன்னிடமே பாராளுமன்ற பெரும்பாண்மை உண்டு என்றும் நினைத்துக்கொண்ட மஹிந்த ராஜபக்க பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை கொடுக்கலாம் என விடயங்களை முடுக்கிவிட்டு 24 மணிநேரங்களுள் மஹிந்தவை விட்டு 8 அமைச்சர்கள் மைத்திரிபாலவின் வாசஸ்தலம் நுழைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 40 ஐயும் தாண்டும் என புதிய ஆழும்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள அமைச்சர்கள்.

1. டாக்டர் சரத் அமுனுகம
2. ஜனக்க பண்டார தென்னக்கோண்
3 . அதாவுட செனவிரட்ண
4. தயாசிறி ஜெயசேகர
5 . எஸ்பி நாவின்ன
6. விஜித் விஜிதமுனி சொய்சா
7. பிசசேன கமகே
8. ரெஜினோல்ட கூரே

இதேநேரம் புதிய அரசில் இணைவதற்கு முன்னாள் அமைச்சரும் ஈபிடிபி யின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். ஆனால் அவரை கூட்டில் சேர்த்தால் த.தே.கூ இணைந்து கொள்ளாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் சிக்கல்கள் தோன்றியுள்ளதாக தெரியவருகின்றது.

2 comments :

கரன் ,  January 11, 2015 at 3:36 PM  

டக்கிளசு மட்டும் புதிய ஆழும் கட்சியின் கதவினை தட்டவில்லை. நேற்றுவரை மகிந்தவிற்கு துதிபாடிய புலன்பெயர்ந்ததுகளும்தான் வாசப்படியில் பிச்சைப்பாத்திரத்துடன் சென்றுள்ளது.

நேற்றுவரை மகிந்தவிற்கு துதிபாடிய சிறிபதி சிவனடியான் என்ற பச்சோந்தி ஆட்சிமாறி 2 மணி நேரத்தில் மங்கள சமரவீரவிற்கு எவ்வாறு சாமரம் வீசியுள்ளான் என்பதை இங்கே பாருங்கள்


Sripathy Sivanadiyar‎Mangala Samaraweera
22 hrs · London, United Kingdom ·
DEAR HONORABLE SIR, THE FLOWERS PLUCKED FROM YOUR GARDEN HAS BEEN MADE INTO A GARLAND ADDING ART AND MUSIC REPLACING ITS FRAGRANCE!!! I TRUST IT WILL RECEIVE YOUR APPRECIATION. SHALL FOSTER FRIENDSHIP THROUGH EXPRESSION OF THANKS AND BY DOING GOOD!!! Sympathetic Home (Dayawe Niwasa) UK-London Charity Org.

Anonymous ,  January 11, 2015 at 9:40 PM  

உண்மையில் டக்கிலஸ் கூட்டங்களுக்கும் புலம் பெயர் புலிப்பினாமி கூட்டங்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. எல்லாமே ஈழத்தமினத்தின் துரோகிகளே. இது ஈழதமிழர்க்கு மட்டுமல்ல இலங்கை அரசாங்கதிக்கும் நன்றாக புரியும்.
Wanni Tamils

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com