வவுனியா புதுக்குளத்தில் விபச்சாரம். அரசும், சமூகமும் வேடிக்கை.
வவுனியா நகரத்தில் இருந்து சுமார் 4.5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள புதுக்குளம் கிராமம் சாஸ்திரிகூழாங்குளம் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ளது. இங்கு விபச்சாரம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுக்குளம் கிராமத்தில் சில பெண்கள் பல ஆண்களோடு தொடர்புகளை வைத்துள்ளமை தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட பெண்களின் வீட்டுக்கு பல தரப்பட்ட ஆண்கள் மற்றும் போலீஸ்காரர்,சி.ஐ.டி யினர் வந்து போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இது தொடர்பாக கிராமத்தில் உள்ள சிலர் தரணிக்குளம் போலிஸில் முறையிட்ட போதிலும் அங்கு இந்த பேச்சுக்கள் எதுவும் எடுபடவில்லை. காரணம் அங்கு கடமையில் இருக்கின்ற சிலரும் இங்கு வருவதாக இருக்கின்ற நிலையில், அந்த ஊர் இளைஞர்களும் திசைமாறி போகின்றனர் என்று ஒரு முதியவர் விசனம் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பெண்களின் பெயர் விபரங்கள் கிடைத்துள்ள போதிலும் அவர்களது பிள்ளைகளின் எதிர் கால வாழ்க்கை கருதி பெயர்கள் வெளியிடப்படவில்லை.
3 comments :
சமூகத்தை சீரழிக்கும் பெண்கள் இருக்கிறார்கள் தான் செய்கிறார்கள். ஆனால் செய்தியாளரே உமக்கு ஒரு தகவல், இதற்கு போகும் ஆண்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தானே?
சமூகத்தை சீரழிக்கும் பெண்கள் இருக்கிறார்கள் தான் செய்கிறார்கள். ஆனால் செய்தியாளரே உமக்கு ஒரு தகவல், இதற்கு போகும் ஆண்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தானே?
நண்பரே உங்கள் கவலை பாராட்டப்பட வேண்டியதே என்றாலும் அவர்கள் தவறு செய்வதற்கு காரணம் வறுமை' மறுமணம் செய்யமுடியாமை' சமூக உதவி இன்மை' இப்படியான கஷ்டங்கள் இருந்தால் அதை நீக்க முயற்சிப்போம் இதையும் தாண்டி தவறு செய்தால் அவர்கள் தண்டிக்க படவேண்டியவர்களே.
Post a Comment