என் மகனுக்கோ குதிரை மீது ஏற ஆசை, அவர் மகனுக்கோ அடுத்தவன் மனைவி மீது ஏற ஆசை. மைத்திரிக்கு மஹிந்தர் பதிலடி!
எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக களமிறங்கியுள்ள மைத்திரபால சிறிசேன நாள்தோறும் அரச மாளிகையின் அந்தரங்களை போட்டுடைத்து வருகின்றார். கடந்தவாரம் தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய அவர் பிரித்தானியாவின் பக்கிங்காங் பலஸிலிந்து பல்லாயிரம் கோடி பெறுமதியான குதிரை ஒன்று கொண்டுவரப்பட்டதாகவும், ஒய்வுநேரங்களில் கொழும்பு அரச மாளிகையிலிருந்து ஹெலிக்கொப்டரில் புறப்படும் மஹிந்தவின் இளவரசன் நுவரேலியாவில் பராமரிக்கப்படுகின்ற குதிரையில் ஏறிச் சவாரி செய்துவிட்டு இரு மணி நேரங்களில் மீண்டும் அரச மாளிகைக்கு திரும்புகின்றார் என்றும் இவ்வாறு வீண்விரயம் செய்யப்படுவது மக்களின் பணம் எனக்குறிப்பிட்ட அவர் இது தொடரவேண்டுமா என்பதை என் தங்கச் செல்லங்களே முடிவெடுங்கள் என்றார்.
மைத்திரியின் இக்கூற்றுக்கு தனது பிரச்சாரக்கூட்டமொன்றில் பதிலளித்துள்ள மஹிந்த ராஜபக்ச, எனது புத்திரன் குதிரையில் ஏறுவதற்கே ஆசைப்படுகின்றான் என்றும் அதில் தப்போதும் இல்லை என்றும் கூறிய அவர் , மைத்திரியின் மகன் பாசிக்குடாவில் உதவி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மகனின் மனைவி மீது ஏற முயற்சித்தாக தெரிவித்துள்ளார்.
3 comments :
உங்கள் மகன் குதிரையில் ஏற ஆசைப்படலாம் அதில் தப்பேதும் இல்லை. குதிரை ஒடுவதற்கு கொழும்பிலிருந்து நுவரேலியாவிற்கு ஹெலிக்கொப்டரிலும் சென்றுவரலாம் அதிலும் தப்பேதும் இல்லை. ஆனால் அதற்கு உங்க சொந்தப்பணத்திலை செலவளிக்கவேண்டும் சார். இது நீங்க நம்மட வரிப்பணத்திலை எல்லோ குதிரை ஓட்டுறயள். இது ஆகுமா சார்.
மகிந்த அரசாங்கம் பொதுமக்கள் பணத்தை மோசடி செய்கிறார்கள், துஸ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதை, தனிப்பட்ட ஒருவரின் செயல் பாட்டுடன் சேர்த்து ஒப்பிட முடியாது. மகிந்தர் இத்தகைய கூற்றுகளால் மக்களை மேலும் மடையர்களாக்கி உண்மையை திசை திருப்பி விடலாம் என்று நினைக்கலாம். ஆனால் மகிந்தர் நினைப்பதை போல் மக்கள் மடையர்கள் அல்ல. மகிந்தருக்கு இம்முறை தோல்வி நிச்சயம்
ஆனால் தேர்தலை கடைசி கட்டத்தில் குழப்பி அளாப்பி விடுவார்.
Post a Comment