தொடர்ந்து நான் அரசாங்கத்தில் இருக்க வேண்டுமா வேண்டாமா? - அரசிற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றார் மர்வின் சில்வா
தான் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருக்க வேண்டுமாயின் தனது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்க வேண்டும் என அமைச்சர் மர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பேலியகொடவில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது அவர் உரையாற்றுகையில், தனக்கு தொடர்ந்து பணிபுரியத் தெரியாதுவிட்டால்அரசாங்கத்தில் இருப்பதன் அர்த்தம் தான் என்ன என வினவியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் –
“பெரிய வாகனம் கிடைத்திருக்கின்றது…பாதுகாவலர்கள் கிடைத்திருக்கின்றார்கள்… என நான் பச்சோந்தியாக இருக்க வேண்டியதில்லை. அவ்வாறான பச்சோந்திகள் எங்கள் ஆளும் கட்சியினுள்ளும் இருக்கின்றார்கள். அவ்வாறான பாத்திரம் பொதுமக்களுக்குத் தேவையில்லை. மக்களுக்குத் தேவையானவற்றை என்னால் செய்ய முடியாது விட்டால், அதற்கு அரசாங்கம் உறுதுணையாக இருக்காது விட்டால் கொடுத்திருக்கின்ற வாகனங்களும்.. பாதுகாவலர்களும் எனக்குத் தேவையில்லை. எனக்குச் சொந்த வாகனம் இருக்கின்றது.. பாதுகாவலர்களாக பொதுமக்கள் இருக்கின்றார்கள். ஒருவருடமும் இரண்டு மாதங்கள் எனக்குப் பணிபுரிய இடந்தரவில்லை. அதுதான் என்னுள் இருக்கின்ற வேதனையும் கோபமும். எதிர்வரும் காலத்தில் அரசாங்கம் என் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காதவிடத்து நான் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியில் இருக்கப் போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
1 comments :
மர்வின் சில்வாவுக்கு நிலைமை விளங்கி விட்டது போலும். நடந்து வந்த பாதையில் மீண்டும் தாய்வீடான ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்று ரணிலுக்கு செருப்பாக மாற தயாராகின்றார்.
இவனுகள் ஒருத்தனுக்கும் ஐ.தே.கட்சியில் இடம் கிடையாது என்றும் கடைக்கு செல்லும் சிறுவர்களாகவே பயன்படுத்தப்படுவர் என்றும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment