Monday, September 8, 2014

GPL ஆங்கிலப் பயிற்சி நெறிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

வெலிகம கல்பொக்கை பிரீமியர் லீக் அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்த, இலவச ஆங்கிலப் பயிற்சி நெறியை சிறப்பாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (08) இடம்பெறவுள்ளது.

வெலிகம அறபா தேசிய பாடசாலை வெபா மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், விசேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். ஸுஹைர் அவர்களும், விசேட பேச்சாளராக ஜாமிய்யா நளீமிய்யாக இஸ்லாமியக் கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையார் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பழீல் (நளீமி) அவர்களும் கலந்து கொள்ளவுள்ளதுடன், வெலிகம நகரபிதா எச்.எச். முஹம்மத், அறபா தேசிய பாடசாலை அதிபர் அஸ்ஸெய்யித் வாரிஸ் அலி மௌலானா, வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை அதிபர் ஸனூலா, தென்னிலங்கை இஸ்லாமிய செயலக நிறுவுநர் அல்ஹாஜ் கப்பார் ஆகியோர் சிறப்பதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.

(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment