Monday, September 8, 2014

தலவாக்கலை மாணவி திடீர் மறைவு! பொலிஸார் தேடுதல் பணிகளில்...!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கொடை மடக்கும்புர கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் சக்திவேல் நித்தியா(வயது 15) எனும் மாணவி சென்ற வெள்ளிக்கிழமை (05) யிலிருந்து தீடீரென காணாமல் போயுள்ளார்.

வெளியே சென்ற மாணவி வீட்டுக்கு திரும்பாததையடுத்து மாணவியின் உறவினர்கள் அயலவர்களின் உதவியோடு தேடுதல் பணிகளில் ஈடுப்பட்டிருந்த போதிலும் அவர் கிடைக்கப்பெறவில்லை. அதன்பின் தந்தை நேற்று (07) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு தேடுதல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மாணவி வட்டக்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி என்பது குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

No comments:

Post a Comment